அமெரிக்க கொரோனா தடுப்பூசி: மருந்து வெற்றி.. ஆனால் ஒரு சிக்கல்!

problem in Pfizer COVID vaccine

கொரோனாவுக்கு எதிரான தங்கள் நிறுவனத்தின் தடுப்பு மருந்து 90 சதவிகிதம் வெற்றிபெற்றுள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த pfizer தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கான முதல் தடுப்பு மருந்து 90% மக்களுக்கு அந்நோய் ஏற்படாமல் தடுக்கும். மேலும் தடுப்பு மருந்து செலுத்திக் கொண்டவர்களில் யாருக்கும் இதுவரை பாதுகாப்பு பிரச்னை எழவில்லை. 6 நாடுகளில் 43,500 பேருக்கு இம்மருந்து செலுத்தி பரிசோதிக்கப்பட்டதில் யாருக்கும் எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இம்மருந்து விரைவில் புழக்கத்துக்கு வரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவித்தது. இந்த நிறுவனத்தின் அறிவிப்பை அடுத்து இங்கிலாந்து அரசு முதல்கட்டமாக 1 கோடி டோஸ்களை வாங்க இருக்கிறது.

ஆனால் தற்போது இந்த தடுப்பு மருந்தில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. இந்த தடுப்பூசியை, மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு கீழே வைத்து தான் பயன்படுத்த முடியும் என்பது தான் அந்த சிக்கல். இந்த வெப்ப நிலையில் பயன்படுத்தினால் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை இந்த மருந்து ஏற்படுத்தும். இந்த வெப்ப நிலையில் இதை பயன்படுத்துவது மிகவும் நவீனமான அமெரிக்க மருத்துவமனைகளிலேயே சவாலான செயல் ஆகும். அதனால், வளரும் மற்றும் ஏழை நாடுகளில் உள்ள சாதாரண மக்களுக்கு இதை பயன்படுத்துவது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

You'r reading அமெரிக்க கொரோனா தடுப்பூசி: மருந்து வெற்றி.. ஆனால் ஒரு சிக்கல்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாலாஜிக்காக இரண்டு கன்னிகள் மோதிக்கொள்ளும் தரமான சம்பவம்.. பிக் பாஸின் 2வது ப்ரோமோ..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்