இந்திய மதிப்பில் ரூ.372.16 கோடி.. டிரம்ப் விவகாரத்தால் கோடீஸ்வரியாக போகும் மெலனியா

if melania got divorce she get 372 crore

அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்துள்ள டிரம்ப், வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறியதும், அவரை மெலனியா டிரம்ப் விவகாரத்து செய்து விடுவார் என்று வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவியாளர் ஸ்டிபன் வோல்கோஃப் கூறியுள்ளாா். டிரம்ப் - மெலானியாவின் மகன் போரனுக்கு சொத்தில் சமமான பங்கை வழங்க கோரி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார் என்றும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது டிரம்ப் - மெலனியாவை பிரிந்தால், அவருக்கு ஜீவனாம்சம் எவ்வளவு கிடைக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெலனியாவுக்கும் டிரம்பிற்கும் இடையிலான தீர்வு அவர்களின் 14 வயது மகன் போரானைப் பொறுத்து உள்ளது என்றும், விவாகரத்து பெற்றால் மெலனியாவுக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இந்த தொகையின் மதிப்பு ரூ.372.16 கோடி.

இதற்கு முந்தையை இரண்டு திருமணங்களையும் விவாகரத்து செய்துவிட்டார் டிரம்ப். இரண்டாவது மனைவிக்கு, 2 மில்லியன் அமெரிக்க டாலர்களும், முதல் மனைவிக்கு 14 மில்லியன் அமெரிக்க டாலர், கனெக்டிகட்டில் ஒரு மாளிகை, நியூயார்க்கில் ஒரு அபார்ட்மெண்ட் உள்ளிட்டவைகளை ஜீவனாம்சமாக டிரம்ப் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading இந்திய மதிப்பில் ரூ.372.16 கோடி.. டிரம்ப் விவகாரத்தால் கோடீஸ்வரியாக போகும் மெலனியா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கணவன் திருடன் என்று அறிந்ததால் மனமுடைந்த மனைவி தூக்கு போட்டு தற்கொலை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்