இறந்தவர்கள் வாக்கு பைடனுக்கு செலுத்தப்பட்டதா.. அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி?!

False Vote Fraud Claims in us elections

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜே பைடன் வெற்றி பெற்றதை தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், வெள்ளை மாளிகை நிர்வாகப் பொறுப்புகள் மாற்றும் பணி தடைப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. டிரம்ப் தனது தோல்வியை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. இத்தனைக்கும் இந்தியா, இங்கிலாந்து, கனடா, இத்தாலி என்று உலக நாடுகளின் பிரதமர்கள், ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்து, புதிய அதிபரை அங்கீகரித்துள்ளனர்.இந்நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு எதிராக டிரம்ப் பல ட்விட்களை போட்டுள்ளார். அதில், இன்னும் தேர்தல் நடைமுறை முடியவில்லை. அனைத்து வாக்குகளும் நேர்மையான முறையில் எண்ணி முடிக்கும் வரை நான் ஓய மாட்டேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில், தேர்தலில் மோசடி செய்ததாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரபல பாக்ஸ் நியூஸ் செய்தியாளர் டக்கர் கார்ல்சன் இந்த புகாரை பைடன் மீது சுமத்தியுள்ளார். அவர் கூறியுள்ளதில், ``இறந்த அமெரிக்கர்கள் வாக்கு தேர்தல் நாளன்று செலுத்தப்பட்டுள்ளது. அந்த வாக்குகள் அனைத்தும், பைடனுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்த வாக்குகள் அனைத்தும் மின்னஞசல் மூலம் பதிவாகியுள்ளது" என்று குறிப்பிட்டு, இறந்தவர்களின் பெயர்களில் செலுத்தப்பட்ட, வாக்கு பட்டியலை அவர் வெளியிட்டு இருக்கிறார். அதிபர் தேர்தலில் இது புதிய சர்ச்சயை கிளப்பியுள்ளது.

You'r reading இறந்தவர்கள் வாக்கு பைடனுக்கு செலுத்தப்பட்டதா.. அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி?! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமெரிக்க டாக்டருக்கு 465 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை... என்ன காரணம்?!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்