பைடனின் அமைச்சரவை இடத்தை ஏற்க மறுக்கும் பாரக் ஒபாமா?.. பின்னணி இதுதான்

Barack Obama rules out role in Biden cabinet

அதிபா் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன்க்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. முன்னாள் அதிபரான ஜார்ஜ் புஷ்ஷும் மற்றும் ட்ரம்பை ஆதரித்த ஃபாக்ஸ் தொலைக்காட்சியும், அரசியல் தலைவா்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனா்.இதற்கிடையே டொனால்ட் ட்ரம்ப், தனது தேர்தல் தோல்வியை ஏற்காமல் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறியுள்ளாா்.ஆனால்
ஜோ பைடன் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. இதனால் அமெரிக்கர்கள் அடுத்து என்ன நடக்க போகிறது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்து வருகின்றனா்.

அதிபா் தேர்தல் முடிவுகள் வெளியாகி 11 நாட்கள் முடிந்துள்ள நிலையில் அமைச்சரவையில் யார் யார் இடம்பெற வேண்டும் என்பதை ஆலோசித்து வருகிறார் ஜோ பைடன்.இதில் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா இடம்பெறவாா்"என தகவல்கள்"வெளியாகியுள்ளன.இந்த தகவல்கள் தொடர்பாக பராக் ஒபாமாவிடம் கேள்விகள் கேட்ட போது. அதற்கு ஒபாமா, பைடன் அவரது அமைச்சரவையில் தனக்கு இடம் கொடுத்தால் அதனை ஏற்கமாட்டேன் என்றும் அமைச்சரவையில் இணைந்தால் என் மனைவி மிச்சேல் நிச்சயம் என்னை விட்டு பிரிந்து விடுவார்"என்றும் கூறியுள்ளாா். மேலும் பைடனுக்கு தன்னுடைய ஆலோசனைகள் தேவைபடாது எனவும் வெள்ளை மாளிகையின் பணியாளராக செயல்பட தனக்கு விருப்பம், இல்லை எனவும் அதே சமயம் தன்னால் முயன்ற உதவிகளை செய்வேன் எனக் அவா் கூறியுள்ளாா் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

பைடன் அமைச்சரவையில் சுகாதாரத்துறையில் இந்தியாவை பூர்விகமாக கொண்டுள்ள விவேக் மூர்த்தி இடம்பெற போவதாகவும் மேலும் அமைச்சரவையில் பெண்களுக்கு அதிக முக்கியவத்துவம் கொடுக்கப்படலாம் என தகவல்கள் வெளி வந்துள்ளன. மேலும் வெளியுறவுத் துறை,பாதுகாப்புத்துறை போன்ற முக்கிய துறைகளில் பெண்களே அமைச்சர்களாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் ஒவ்வொன்றாக கசிந்து கொண்டே இருக்கின்றன..

You'r reading பைடனின் அமைச்சரவை இடத்தை ஏற்க மறுக்கும் பாரக் ஒபாமா?.. பின்னணி இதுதான் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கருப்பன் குசும்புக்காரன்.. நடிகரின் பரிதாப நிலை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்