ஈரான் மீதான கடைசி அட்டாக்... போருக்கு வித்திடுகிறாரா டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஈரான் இடையே வாய்க்கால் தகராறு ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது அதிபர் பதவியில் இருந்து விலகும் முன் ஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த வியாழக்கிழமை இது தொடர்பாக துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, செயல் பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டோபர் சி மில்லர் மற்றும் கூட்டுத் தலைவர்களின் தலைவர் மார்க் மில்லி உள்ளிட்டோருடன் தாக்குதல் நடத்த டிரம்ப் ஆலோசனை நடத்தியுள்ளார் என்று டைம்ஸ் செய்திவெளியிட்டுள்ளது. அதன்படி, ஈரானின் முக்கிய அணுசக்தி தளத்தின் மீது ஏவுகனை தாக்குதல் நடத்துவது என்று அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த தாக்குதலை நடத்தினால் அது ஈரானுடன் போருக்கு வழி வகுக்கும் என டிரம்ப்பின் ஆலோசகர்கள் அவரை எச்சரித்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த திடீர் திட்டத்துக்கு காரணம், ஈரானிடம் யுரேனியம் கை இருப்புக்களை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும், ஈரானின் யுரேனியம் கையிருப்பு வரம்பை விட 12 மடங்கு அதிகமாக இருக்கிறது ஐநா கூட்டத்துக்கு முதல் நாள் ரகசிய அறிக்கை வெளியிட்டதே காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் தற்போது ஈரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.

You'r reading ஈரான் மீதான கடைசி அட்டாக்... போருக்கு வித்திடுகிறாரா டிரம்ப்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜிப்மரில் பணிபுரிய ஒர் வாய்ப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்