அதிபராகும் புதினின் மகள்... புற்றுநோயால் திடீர் முடிவு?!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என சில நாட்களுக்கு தகவல் வெளியாகியது. பார்க்கின்சன் எனப்படும் மூளையின் ஒருபகுதி சிதைவுக்கு உள்ளாகும் நோய் தாக்குதலில் புதின் சிக்கியுள்ளதாகவும், இதனால் வெளியுலகில் முகம் காட்டுவதை தவிர்த்து வருகிறார் புதின் என்றும், கடந்த சில நாட்களாக கால் மற்றும் கைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான வலியால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுன.

நோயின் தாக்கம் தீவிரம் அடைந்து வருவதால் அதிபர் பதவியில் இருந்து அடுத்த ஆண்டு விலக புதின் திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. புதினின் இந்த முடிவுக்கு அவரின் மகள்கள் தான் காரணம் என்றும் அந்த செய்திகளில் கூறப்பட்டது. இந்த நிலையில் புதினுக்கு புற்றுநோய் இருப்பதாகவும் புற்றுநோய் சிகிச்சைக்காக கடந்த பிப்ரவரியில் புதின் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் மாஸ்கோ ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஆப் இன்டர்நேஷனல் ரிலேஷன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான வலேரி சோலோவி என்பவர் இங்கிலாந்து ஊடகத்துக்கு அளித்து பெட்டியில் கூறியுள்ளார். புதினின் அடிவயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக இன்னொருவர் கூறியதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் ``புதின் தற்போது வெளியே வருவதை தவிர்த்து வருகிறார். நோயால் அவதிப்பட்டு வரும் அவர், பதவி விலக திட்டமிட்டு, இரண்டு மகள்களில் ஒருவரான கேடரினா டிகோனோவாவை அதிபராக்கவும் திட்டமிட்டு வருகிறார்" என்று வலேரி சோலோவி கூறியுள்ளார்.

You'r reading அதிபராகும் புதினின் மகள்... புற்றுநோயால் திடீர் முடிவு?! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பஞ்சாப் விவசாயிகளால் ஏற்பட்ட ரூ.2220 கோடி வருவாய் இழப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்