ரஃபேல் தந்த பயம்... சீனாவிடம் தஞ்சம் புகுந்த பாகிஸ்தான்!

பிரான்ஸில் இருந்து ரஃபேல் விமானங்களை இந்தியா இறக்குமதி செய்த நிலையில் இந்தியாவை போலவே தற்போது பாகிஸ்தானும் புதிய போர் விமானங்களை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா பிரான்ஸிடம் இருந்து வாங்கிய நிலையில் பாகிஸ்தான் சீனாவிடம் இருந்து வாங்க இருக்கிறது. ரஃபேல் விமானங்களை கொண்டு தாக்குதல் இந்தியா நடத்தும் பட்சத்தில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பயந்துகொண்டு பாகிஸ்தான் விமானங்களை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிடம் இருந்து ஜே-20 போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்க இருக்கிறது. முதல் கட்டமாக 5 விமானங்களை சீனா பாகிஸ்தானுக்கு தர இருக்கிறது.

இந்தியா ரஃபேல் விமானங்களை வாங்கும் முன்பாகவே பாகிஸ்தான் இந்த திட்டம் வைத்திருந்தது என்றாலும், விமானத்தின் விலையை கண்டு அதை வாங்கவில்லை. ஆனால் ரஃபேல் விமானங்களை இந்தியா வாங்கி குவித்ததை அடுத்து தற்போது பாகிஸ்தான் மீண்டும் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாகிஸ்தான் விமானப்படையில் இருந்த ஜே.எஃப்-17 ஜெட் விமானங்கள் அடிக்கடி கோளாறால் தவிக்க வைக்க தற்போது புதிய விமானங்கள் பக்கம் தலைசாய்த்துள்ளது.

You'r reading ரஃபேல் தந்த பயம்... சீனாவிடம் தஞ்சம் புகுந்த பாகிஸ்தான்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி: தவான் தகவல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்