கடைசி காலத்தில் மரடோனா அனுபவித்த வேதனைகள்.. வெளிவந்த புதிய தகவல்!

அர்ஜென்டினா நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் டீகோ மரடோனா. கால்பந்து உலகில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள இவர் நேற்று தனது 60 வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவரின் மறைவு கால்பந்து ரசிகர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜென்டினா அணியின் கேப்டன், பயிற்சியாளராகவும் பணியாற்றி இருக்கிறார். இந்நிலையில், இறப்பதற்கு முன் கடைசி காலத்தில் மரடோனா பட்ட அவதிகள் குறித்து தற்போது தெரியவந்துள்ளது. கடந்த மாதம் 30ம் தேதி தான் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடிய மரடோனாவுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து அவர் அர்ஜென்டினாவின் லா பிளாட்டா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அப்போது அவரின் உடல்நிலை குறித்து பேசிய மருத்துவமனை நிர்வாகம், ``கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை. அதேநேரம் உடல் அளவு எந்த பாதிப்பும் இல்லை. என்றாலும், மனதளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதிக அளவில் மதுபானம் உட்கொண்டது, மனரீதியாக பாதிக்கப்பட்டது மற்றும் அனைத்து சுகாதார விசயங்களாலும் மரடோனாவின் உடல்நிலையில் சிக்கல் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து மரடோனா மருத்துவமனையில் 3 முதல் 5 நாட்கள் வரை தங்கியிருந்து சிகிச்சை பெற்று கொள்வார் எனக் கூறப்பட்டது.

இதற்கடுத்த மறுநாள், ``மரடோனாவுக்கு மூளையில் இரத்த உறைவு ஏற்பட்டு இருந்தது. இதற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் நாள்பட்ட ரத்தகட்டி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்றப்பட்டது. தற்போது மரடோனா நலமாக இருக்கிறார்" என்று அறிவித்தது மருத்துவமனை நிர்வாகம். இந்த அறுவை சிகிச்சைக்கு பின் வீட்டில் ரெஸ்ட் எடுத்துவந்தபோது தான் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

கடைசி காலங்களில் போதைக்கு அடிமையாகியுள்ளார் மரடோனா. அதிலும் குடி அதிகமாகவே இருந்துள்ளது. மன அழுத்தத்தின் காரணமாக அவர் போதைக்கு அடிமையாகி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

You'r reading கடைசி காலத்தில் மரடோனா அனுபவித்த வேதனைகள்.. வெளிவந்த புதிய தகவல்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஓடிடி சந்தா சலுகையுடன் விவோ ஒய்1 ஸ்மார்ட்போன் அறிமுகம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்