பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோனுக்கு கொரோனா...

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோனுக்கு கொரோனா பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஒரு வாரம் சுய தனிமைக்கு சென்றுள்ளார்.உலக நாடுகளில் இன்னும் கொரோனா பரவலின் வேகம் குறையவில்லை. இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,46,54,910 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 16,57,39 பேர் மரணமடைந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டிலும் இந்நோயின் தீவிரம் இன்னும் குறையவில்லை.

இதுவரை இந்த நாட்டில் 59,300 பேர் மரணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியுள்ளது. இங்கு தற்போது கொரோனாவின் இரண்டாவது கட்ட தாக்குதல் தொடங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோனுக்கு கொரோனா பரவியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் ஒரு வாரம் சுய தனிமைக்குச் சென்றுள்ளார். தனிமையில் உள்ள போதிலும் தொடர்ந்து அவர் பணியில் ஈடுபட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டில் இரண்டாம் கட்ட கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக லாக்டவுன் நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த வாரம் தான் இந்த நிபந்தனைகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனாலும் இப்போதும் பிரான்சில் இரவு 8 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஓட்டல்கள், தியேட்டர்கள், ரெஸ்டாரண்டுகள் மற்றும் கபேக்கள் உள்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

You'r reading பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோனுக்கு கொரோனா... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்