எல்லையில் உணவின்றி பரிதவித்த லாரி ஓட்டுநர்கள்.. உணவு வழங்கி சீக்கியர்கள்!

பிரிட்டன்: இங்கிலாந்து எல்லையில் தவித்துவரும் லாரி ஓட்டுநர்களுக்கு உணவு வழங்கியுள்ள சீக்கிய தொண்டர்களின் சேவைக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தாக்கும் குறைந்து வருகிறது. இதற்கிடையே, இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டதால், இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்கள் தரையிரங்க இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தடை விதித்துள்ளது.

இதனைபோல், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்து இடையேயான சாலை வழி போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால், இங்கிலாந்து இடையேயான போக்குவரத்தை பிரான்ஸ் தடை செய்துள்ளதால், 1000 கணக்கான சரக்கு லாரிகள் இருநாட்டு எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. 10,000-க்கும் அதிகமான சரக்கு லாரிகள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன. காரணம், லாரி ஓட்டுநர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு, சோதனை முடிவில் நெகட்டிவ் என்று வந்தால் மட்டுமே லாரி ஓட்டுநர்கள் பிரான்ஸ் எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆனால், கொரோனா பரிசோதனைக்கு பல மணி நேரம் எடுக்கிறது என்பதால், உணவு, குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான லாரி ஓட்டுநனர்கள் பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள சீக்கியர்கள் தங்கள் தொண்டு அமைப்புகள் மூலம் இருநாட்டு எல்லையில் உணவின்றி சிக்கி தவித்து வரும் லாரி ஓட்டுநர்களுக்கு தாங்களாகவே சமைத்து இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர். இதன்படி, சமார் 2,000 உணவுப் பொட்டலங்கள் லாரி ஓட்டுநர்களுக்கு வழங்கியுள்ளதாக சீக்கிய தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். சீக்கிய தொண்டர்களின் இந்த சேவைக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

You'r reading எல்லையில் உணவின்றி பரிதவித்த லாரி ஓட்டுநர்கள்.. உணவு வழங்கி சீக்கியர்கள்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மாணவர்கள் செல்போன் வாங்க ரூ.10,000... மம்தா பானர்ஜி அதிரடி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்