வெள்ளை மாளிகையில் இன்று கடைசி நாள்: மகளுக்கு நிச்சயதார்த்தம் செய்து வைத்த டிரம்ப்

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் முன் மகளுக்கு டிரம்ப் நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளார். நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜொ பைடன் வெற்றி பெற்றார். தொடர்ந்து, இன்று புதிய அதிபராக பைடன் பதவியேற்கவுள்ளார். இதற்கான ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, தேர்தலில் தோல்வியடைந்த அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் கடைசி நாளாக இன்று இருக்கிறார்.

இன்றுடன் அவர் தனது பதவி காலத்தை இன்றுடன் நிறைவு செய்கிறார். இதனையடுத்து, நாட்டுமக்களிடம் விடைபெறும் வகையில் காணொலி மூலம் உரையாற்றிய டிரம்ப் கடந்த நான்கு ஆண்டுகளில் நாட்டை புத்தாக்கம் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததாக கூறியுள்ளார். அமெரிக்காவை மீண்டும் மகத்தான நாடாக மாற்றும் குறிக்கோளுடன் செயல்பட்டதாகவும், அனைவரும் இணைந்து இலக்கை அடைந்திருப்பது பெருமிதமளிப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே, வெள்ளி மாளிகையை விட்டு வெளியேறும்முன் டிரம்ப் குடும்ப விசேஷம் நிகழ்ந்துள்ளது. டிரம்ப் மகள் டிஃபானி திருமண நிச்சயதார்த்தம் நிகழ்ந்துள்ளது. 27 வயதான டிஃபானி டிரம்ப் தன்னைவிட 4 வயது குறைவான மைக்கேல் பவுலோஸ் என்பவரை காதலித்து வந்தார். நீண்ட நாள் காதலர்களுக்கு தற்போது திருமண செய்து வைக்க இரு வீட்டாரும் ஒப்புக்கொண்டனர்.

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த டிஃபானி, அமெரிக்க அதிபராக தந்தையின் கடைசி தினத்தில் இருவரும் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். என் அற்புதமான வருங்கால கணவர் மைக்கேலுடன் நான் செய்த நிச்சயதார்த்தத்தை விட சிறப்பு எதுவும் இல்லை. ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். எங்கள் அடுத்த அத்தியாயத்தை ஒன்றாக எதிர்நோக்குகிறோம் என்றும் உருக்கமாக பதிவிட்டுளளார்.

You'r reading வெள்ளை மாளிகையில் இன்று கடைசி நாள்: மகளுக்கு நிச்சயதார்த்தம் செய்து வைத்த டிரம்ப் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சரித்திர புத்தகத்தை 2வது முறை படிக்கிறார் திரிஷா..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்