உருமாறிய கொரோனா வைரசால்... இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை

உருமாறிய கொரோனா வைரசால் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். மரண எண்ணிக்கையும் கூடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் ஏற்கனவே கொரோனா வைரசால் ஏற்பட்ட பீதி இன்னும் அகலவில்லை. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு மீண்டும் முழு லாக் டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தெற்கு கிழக்கு இங்கிலாந்தில் தான் கடந்த செப்டம்பர் மாதம் இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் ஒரு முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இந்த வைரஸ் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியது. தற்போது பரவியுள்ள கொரோனா வைரசை விட 70 சதவீதம் வேகத்தில் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் பரவும் என்று ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வைரசால் மரண எண்ணிக்கை அதிகரிக்குமா என இதுவரை உறுதியாகக் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது என்றும், வேகமாகப் பரவுவதைப் போலவே மரண எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். இதற்கு உரிய ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இங்கிலாந்தில் 35 லட்சம் கொரோனா நோயாளிகள் உள்ளனர். தினமும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த நாளில் இந்நோயால் பாதிக்கப்பட்டு 1,401 பேர் மரணமடைந்தனர். இதையடுத்து இதுவரை இங்கிலாந்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

You'r reading உருமாறிய கொரோனா வைரசால்... இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எஸ்.ஏ.சந்திரசேகர் படத்தில் ஹீரோவான இயக்குனர்... நான் கடவுள் இல்லை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்