குழந்தைகளை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லாதீர்கள்! - வெளிநாட்டில் கப்பலேறும் இந்தியாவின் மானம்

உங்கள் பெண் குழந்தைகளை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லாதீர்கள். மாடுகளுக்கு இருக்கும் மதிப்புகூட பெண்களுக்கு இருப்பதில்லை என்ற வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட்டுகளை துருக்கியினர் அணிந்து அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

உங்கள் பெண் குழந்தைகளை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லாதீர்கள். மாடுகளுக்கு இருக்கும் மதிப்புகூட பெண்களுக்கு இருப்பதில்லை என்ற வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட்டுகளை துருக்கியினர் அணிந்து அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்தியாவில், தொடர்ந்து பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. 8 வயது பிஞ்சுக் குழந்தைகள் கூட பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் 17 வயதுச் சிறுமியும், காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் 8 வயதுச் சிறுமியும் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது, வெளிநாட்டு பயணிகளை அச்சுறுத்தி உள்ளது.

இந்நிலையில், துருக்கி நாட்டிலுள்ள இஸ்தான்புல் நகரின் விமானப் பயணிகள் இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு எதிரான வசனங்கள் அடங்கிய டி-ஷர்ட்களை அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

‘உங்கள் பெண் குழந்தைகளை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லாதீர்கள். இந்தியாவில் மாடுகளுக்கு இருக்கும் மதிப்புகூட பெண்களுக்கு இருப்பதில்லை. உங்கள் பயணத்தின் கடைசி நகரமாக இந்தியாவை வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அது உங்கள் சுடுகாடாகக்கூட இருக்கலாம்’ போன்ற வசனங்கள், இஸ்தான்புல் விமானப் பயணிகளின் டி-ஷர்ட்டுகளில் இடம்பெற்றுள்ளன.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading குழந்தைகளை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லாதீர்கள்! - வெளிநாட்டில் கப்பலேறும் இந்தியாவின் மானம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஐபிஎல் போட்டியில் சுனில் நரைன் புதிய சாதனை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்