ரஷ்யாவில் பச்சை, நீலம் நிறத்தில் சுத்தி திரியும் தெருநாய்கள்: ஏன், எதற்கு?!

எந்த நாட்டில் பார்த்தாலும் நாய்கள் என்றாலே கருப்பு, வெள்ளை, பிரவுன், சாம்பல் நிறங்களில் தான் நாய்கள் இருக்கும், சில நாய்கள் இந்த 4 நிறங்களின் களவையாக இருக்கும். ஆனால், ரஷ்யாவில் நீலம் மற்றும் பச்சை நிறங்களில் தெருநாய்கள் உலவி வருவது பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நாய்களின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதலில் கடந்த பிப்ரவரி 11-ம் தேதியன்று சுமார் ஏழு தெரு நாய்கள் நீல நிறத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நாய்களின் புகைப்படம் இணையதளத்தில் வைரலானது. இது குறித்து கால்நடை மருத்துவர்கள் சந்தேகத்துடன் கூறுகையில், ரஷ்யாவின் தலைநகர் மாஸ்க்கோவிலிருந்து 370 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள நிஷ்னி நொவ்ஹொரோட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் அதிகமுள்ள Dzerzhinsk நகரில் நிகழ்ந்துள்ளது. Dzerzhinsk நகரில் கண்ணாடி தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. தொழிற்சாலையிருந்த நீல நிற சாயத்தில் நாய்கள் விழுந்து புரண்டதால், அப்படி தெருநாய்கள் மாறியிருக்கலாம் என்றும் தெரிவிக்கி்ன்றனர். இருப்பினும், நீல நிற நாய்கள் நலமுடன் உள்ளதாகவும் நன்றாக உணவு சாப்பிடுவதாக தெரிவிக்கின்றனர்.

இதனைபோன்று, மாஸ்க்கோவிலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Podolsk பகுதியில் சில நாய்கள் பச்சை நிறத்தில் காட்சியளித்துள்ளன.
இதற்கு, மூடப்பட்டு கிடந்த பெயிண்ட் சேமிப்புக்கிடங்கில் இருந்த பச்சை வண்ணமே காரணம் என மாஸ்க்கோ பிராந்திய அமைச்சரவையில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மர்மநபர்களின் நாச வேலை என்று உள்ளூர் ஊடகங்கள் சந்தேகிக்கின்றன.

You'r reading ரஷ்யாவில் பச்சை, நீலம் நிறத்தில் சுத்தி திரியும் தெருநாய்கள்: ஏன், எதற்கு?! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விஜய் ஹசாரே தொடர்: 94 பந்துகளில் 173 ரன்கள் எடுத்து இஷான் கிஷன் ருத்ரதாண்டவம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்