டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேஷனின் தமிழர் திருவிழா 2021..

அமெரிக்காவின் டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேஷன் நடத்தும் தமிழர் திருவிழா 2021 இன்று(பிப்.21) மதியம் இணையவழியாக நடைபெறுகிறது. இதில் திண்டுக்கல் சக்தி குழுவினரின் பாரம்பரிய தமிழ் நடனங்களும் இடம் பெறுகின்றன. அமெரிக்காவில் மினசோட்டாவில் டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேஷன்(TCTA) மற்றும் டுவின் சிட்டீஸ் தமிழ் பாடசாலை செயல்பட்டு வருகிறது. இந்த சங்கம் ஆண்டுதோறும் பல்வேறு தமிழர் விழாக்களையும் சிறப்பாக கொண்டாடி வருகிறது. அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் இவற்றில் உற்சாகமாக கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு தமிழர் திருவிழா2021, இணைய வழியாக பிப்.21ல் நடைபெற உள்ளது. இது குறித்து TCTA வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: TCTA நடத்தும் தமிழர் திருவிழா-2021 இன்று(பிப்.21) பகல் 2 மணி முதல் நடைபெற உள்ளது. இவ்விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இணையவழியாக உங்கள் இல்லங்களையும், இதயங்களையும் அடைய உள்ளது.

தமிழ் கலைகளை ஊக்குவிக்கும் விதமாக திண்டுக்கல் சக்தி கலைக் குழுவினரின் தமிழ் பாரம்பரிய நடனங்கள் முக்கிய கலை நிகழ்ச்சியாக இடம் பெறுகிறது. நமது TCTA குடும்பங்கள் வழங்கும் பல்வேறு சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு உதவி காவல் துறை தலைவர் முனைவர் இரா.திருநாவுக்கரசு இ.கா.ப., விழாவில் பங்கேற்று சிறப்பு சொற்பொழிவு ஆற்றுகிறார். மேலும், தமிழ் கலந்துரையாடல் நிகழ்வும் விழாவில் இடம்பெறுகிறது. நமது TCTP இருமொழி முத்திரை பெற்ற மாணவர்கள் மற்றும் ஓக்லஹோமா பல்கலைக் கழகத்தின் இனமரபு இசை ஆய்வியல் துறை டாக்டர் ஜோ ஷெரினியன் பங்கேற்கின்றனர். ஆதரிப்பீர், ஆனந்தம் கொள்வீர்கள்!!!
FB: https://www.facebook.com/TwinCitiesTamilAssociation/posts/4307901262579613 என்ற பேஸ்புக் தளத்திலும், https://www.youtube.com/watch?v=kcrw0sLVS2kஎன்ற யூடியூப் சேனலிலும் நிகழ்ச்சிகளை கண்டு களிக்கலாம். இவ்வாறு TCTA செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேஷனின் தமிழர் திருவிழா 2021.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டி இந்திய அணி அறிவிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்