இல்லினாய்ஸ், துப்பாக்கிகளின் வேடந்தாங்கலாகிறதா?

ஆயுதம் வைத்துக்கொள்ள ஆதரவான தீர்மானம்

அமெரிக்காவின் இல்லினாய்ஸில் உள்ள எஃபின்காம் கவுண்டியில் கடந்த திங்களன்று நடந்த கூட்டத்தில், ஆயுதம் வைத்துக்கொள்ள ஆதரவான தீர்மானம் நிறைவேறியுள்ளது.

‘அரசியலமைப்புக்கு மாறாக இரண்டாவது சட்டதிருத்தத்தை மாநிலத்தின் சட்டங்கள் தடுக்கக்கூடாது' என்று இத்தீர்மானம் கூறுகிறது. தீர்மானத்தை ஆதரித்து எட்டு பேரும், எதிராக ஒருவரும் வாக்களித்தனர். அமெரிக்காவின் இரண்டாவது சட்டதிருத்தம், ஆயுதம் வைத்திருக்க உரிமை அளிப்பதாகும்.

“உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியிருப்பவர்களுக்கு பாதுகாப்பு இருப்பதுபோன்று, இந்த கவுண்டி ஆயுதம் வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பானதாக விளங்கும்,” என்று எஃபின்காம் கவுண்டியின் அட்டர்னி பிரைன் கிப்ளர் கருத்து தெரிவித்துள்ளார்.

இத்தீர்மானத்தை ஆதரிப்போர், "சட்டப்பூர்வமாக துப்பாக்கி வைத்திருப்பவர்களால் நிகழும் மரணங்களை விட, புகையிலை, மது ஆகியவற்றை பயன்படுத்துவதால் அதிக மரணங்கள் நிகழ்கின்றன," என்று கூறுகின்றனர்.

எஃபின்காம் கவுண்டி ஷெரீப் டேவ் மஹான், "ஷெரீப் அலுவலகம் எப்படி சட்டத்தை அமல் செய்ய வேண்டும் என்று கவுண்டி தீர்மானம் ஆணையிட முடியாது. இது குறித்து இல்லினாய்ஸ் ஷெரீப் கூட்டமைப்பு மற்றும் அட்டர்னியின் ஆலோசனையை பெற்று செயல்படுவேன்," என்று கூறியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading இல்லினாய்ஸ், துப்பாக்கிகளின் வேடந்தாங்கலாகிறதா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ”நடிகனாக அல்லாமல் நண்பனாக கடும் கோபமாக இருக்கிறேன்” - எஸ்.வி.சேகர் மீது விஷால் காட்டம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்