நேரலையின் போது தீவிரவாதிகள் சுட்டதில் பெண் செய்தியாளர் உட்பட 63 பேர் பலி!

தீவிரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப்படை தாக்குதலில் செய்தி வழங்கிக் கொண்டிருந்த பெண் செய்தியாளர் உட்பட 63 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தீவிரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப்படை தாக்குதலில் செய்தி வழங்கிக் கொண்டிருந்த பெண் செய்தியாளர் உட்பட 63 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆஃப்கானிஸ்தானில், வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி ஞாயிறன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது, தலைநகர் காபூலில் வாக்கு பதிவு மையப் பகுதியை குறிவைத்து, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இந்த தாக்குதலில் 63 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பின் போது நேரலையில் செய்தி வழங்கிக்கொண்டிருந்த மரியா என்ற பெண் பத்திரிகையாளர் உடலில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த தீவிரவாத தாக்குதலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், கண்டித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் கூறியுள்ளது. இதனால், ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பதட்ட நிலை உருவாகியுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading நேரலையின் போது தீவிரவாதிகள் சுட்டதில் பெண் செய்தியாளர் உட்பட 63 பேர் பலி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மொறு மொறு மட்டன் பக்கோடா ரெசிபி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்