அணு உலை கழிவை கடலில் கலக்க முடிவு செய்த ஜப்பான்!

2011ஆம் ஆண்டு வந்த சுனாமியால் பாதிப்பிற்கு உள்ளான ஜப்பானின் புகுஷிமா அணு உலையின் கழிவு நீரை கடலில் திறந்துவிட அந்நாட்டு அரசு முடிவு எடுத்துள்ளது. ஆனால் ஜப்பானின் இந்த முடிவை சீனா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்துள்ளன. சுனாமியின் போது மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்ததது. இதனால் அணு உலையைக் குளிர்விக்க மின்சாரம் இல்லாமல் போக 6 யூனிட்களில் 3 யூனிட்கள் சேதம் அடைந்து அப்பகுதிகளில் கதிர்வீச்சு தாக்கம் ஏற்பட்டது.

இதனை அடுத்து, தற்போது புகுஷிமா அணு உலையில் உள்ள அணு கழிவுகளை பாதுகாப்பாக அகற்றிவிட்டு அணு உலையை முழுமையாக செயலிழக்கச் செய்யும் பணிகளில் டெப்கோ என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதன்படி அணு கழிவுகள் நிறைந்த சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் டன் கழிவு நீரை சுத்திகரித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொட்டிகளில் பாதுகாப்பாக சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த கழிவு நீரை தான் கடலில் திறந்து விட ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா தலைமையில் நடந்த அந்நாட்டு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மேலும் 2022-க்குள் இந்த கழிவு நீரை கடலில் கலந்து விடும் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மீனவர்கள், சீனா, தென்கொரியா போன்ற ஜப்பானின் பக்கத்து நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

You'r reading அணு உலை கழிவை கடலில் கலக்க முடிவு செய்த ஜப்பான்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இரவில் படுக்கும் முன்பு இதை தின்று வெந்நீர் குடித்து பாருங்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்