`ட்ரம்ப் என் சகோதரர்!- பிரபல அமெரிக்க பாப் பாடகர் ட்வீட்!

`டொனால்டு ட்ரம்ப் என் சகோதரர்’ என்று அமெரிக்காவின் பரிபல பாப் பாடகர் கான்யே வெஸ்ட் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்பதற்கு முன்னர் இருந்தே பல சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வந்தவர். குறிப்பாக அவர் கருப்பின மக்கள் பற்றியும், அகதிகள் பற்றியும், முஸ்லீம்கள் பற்றியும் தெரிவித்து வந்த கருத்துகள் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகின.

இதனாலேயே, அவருக்கு கருப்பின மக்கள் மத்தியில் செல்வாக்கு கிடையாது என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆப்பிரிக்க- அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த பிரபல பாப் பாடகர் கான்யே வெஸ்ட், `ட்ரம்ப் எனது சகோதரர்’ என்று கூறியுள்ளார்.

இது குறித்து வெஸ்ட், `ட்ரம்ப் கூறும் அனைத்துக் கருத்துகளையும் ஆமோதிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. அதே நேரத்தில், அவரை வெறுப்பவர்களின் மிரட்டலுக்குப் பயந்தெல்லாம் என்னால் அவரை விரும்பாமல் இருக்க முடியாது. அவர் என் சகோதரர் போல.

நம் அனைவருக்கும் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் உரிமை இருக்கறது அல்லவா’ என்று ட்வீட் போட்டுள்ளார். இதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, `நன்றி வெஸ்ட்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

You'r reading `ட்ரம்ப் என் சகோதரர்!- பிரபல அமெரிக்க பாப் பாடகர் ட்வீட்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முதன்முறையாக ரஜினி படத்தில் விஜய் சேதுபதி..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்