இளவரசர் ஹாரி- மார்க்லே திருமணத்துக்கு வர முடியாதே..வருத்தத்தில் தந்தை

இளவரசர் ஹாரி- மார்க்லே ஜோடி திருமணத்துக்கு மணமகளின் தந்தையே வர முடியாத சூழல் நிலவி வருகிறது.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானாவுக்கு பிறந்த இரண்டாவது மகனான ஹாரிக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லே உடன் இத்திருமணம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், லண்டன் அரண்மனையில் விரைவில் நடைபெற உள்ள ராஜ திருமணத்துக்கு மணமகள் மார்க்லேவின் தந்தை வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேகன் மார்க்லேவின் தந்தை தாமஸ் மார்க்லே கடந்த வாரம் நெஞ்சு வலியால் மெக்சிகோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இருதய பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தற்போது தாமஸ் மார்க்லேவுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், அறுவை சிகிச்சைக்கான நாளும், ஹாரி- மார்க்லேவின் திருமண நாளும் ஒரே நாளாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

அறுவை சிகிச்சை முன்னதாகவே நடந்தாலும், பயணம் செய்ய முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளதால் ராஜ பரம்பரை ஜோடி குழப்பத்தில் உள்ளதாம்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading இளவரசர் ஹாரி- மார்க்லே திருமணத்துக்கு வர முடியாதே..வருத்தத்தில் தந்தை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சூறாவளி சுற்றுப் பயணத்தை தொடங்கிய கமல்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்