சமய காழ்ப்புணர்ச்சி - கலிபோர்னியாவில் துரத்தப்பட்ட அமெரிக்கர்

சமய காழ்ப்புணர்ச்சி - கடையிலிருந்து துரத்தப்பட்ட அமெரிக்கர்

முஸ்லிம் பெண் ஒருவர்மேல் வெறுப்பை காட்டியதற்காக கலிபோர்னியாவில் ஒரு கடையில் அமெரிக்கர் ஒருவருக்கு காஃபி வழங்க அக்கடையின் மேலாளர் மறுத்துவிட்டார்.

கலிபோர்னியாவில் உள்ள 'த காஃபி பீன் & டீ லீஃப்' என்ற கடையில் கடந்த வாரம் இச்சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. இதன் ஒளிப்பதிவை பத்திரிகையாளர் ஒருவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

காஃபி வாங்குவதற்காக வரிசையில் நின்றபோது, முகத்தை மூடி 'நிக்காப்' அணிந்திருந்த பெண்ணை பார்த்து, "நீ ஆவியா?" என்று அந்த அமெரிக்கர் கேட்கிறார். அதற்கு, "நான் ஒரு முஸ்லிம்," என்று அந்தப் பெண் கூறுகிறார். "உன் மதம் எனக்குப் பிடிக்காது. உன்னால் கொல்லப்பட நான் விரும்பவில்லை,"என்று அவர் கூறுகிறார். அதைத் தொடர்ந்து இருவருக்கும் சமயம் சார்ந்த விவாதம் நடக்கிறது.

அமெரிக்கரின் முறை வந்தபோது, “பொது இனத்தின் அமைதியை குலைக்கும்வண்ணம் இனவெறியோடு நடந்து கொண்டதால் உங்களுக்கு காஃபி வழங்க முடியாது” என அக்கடையின் மேலாளர் மறுத்துவிடுகிறார்.

இந்த வீடியோ டிவிட்டரில் பரபரப்பாக வலம் வருகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading சமய காழ்ப்புணர்ச்சி - கலிபோர்னியாவில் துரத்தப்பட்ட அமெரிக்கர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ‘ட்ரம்ப்புக்கு அந்த வித்தியாசம் தெரியாது’ - பில் கேட்ஸ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்