ஃபேஸ்புக் - அமெரிக்கர்களுக்கு புதிய கட்டுப்பாடு

அமெரிக்கர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதத்தது ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்கில் அரசியல் விளம்பரங்கள் செய்ய புதிய விதிகள் நடைமுறை படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி அமெரிக்காவில் அரசியல் பரப்புரை, துப்பாக்கி, கருக்கலைப்பு, குடிபுகல் உள்ளிட்ட பல விளம்பரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற விளம்பரங்களை வாங்குவோர், சோஷியல் செக்யூரிட்டி நம்பர் என்னும் சமுதாய பாதுகாப்பு எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை தருவதோடு, அரசு வழங்கிய ஏதாவது ஒரு அடையாள அட்டையையும் அமெரிக்க அஞ்சல் முகவரியையும் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்ற குற்றச்சாட்டை அடுத்தும், ஃபேஸ்புக் பதிவர்களின் தனிப்பட்ட தகவல்கள் தவறாக கையாளப்படுகிறது என்ற குற்றச்சாட்டை அடுத்தும் இப்புதிய விதிகள் விதிக்கப்பட்டுள்ளன.

விளம்பரங்களை வாங்குவோரின் அடையாளங்களை உறுதிப்படுத்திய பின்னர், அவர்கள் கொடுத்த அடையாள அட்டை பதிவுகள் அழிக்கப்பட்டுவிடும் என கூறப்படுகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஃபேஸ்புக் - அமெரிக்கர்களுக்கு புதிய கட்டுப்பாடு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்