தனது ஆயுதக் கிடங்கைத் தகர்த்த வடகொரியா!

வடகொரியாவே தன் நாட்டிலுள்ள அணு ஆயுதக் கிடங்கைத் தகர்த்துள்ளது.

ஒரு வழியாக கொரிய திபகற்பத்தில் நிலவி வந்த பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. சமீபத்தில் `இனி அணு ஆயுதச் சோதனை எங்கள் நாட்டில் கிடையாது’ என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் முன்னிலையில் அறிவித்தார்.

இதையடுத்து இரு நாட்டு அதிபர்களும் கூட்டாக, `அமைதி நோக்கி கொரியா திரும்பிவிட்டது’ என்று தெரிவித்தனர். இதையடுத்து வரலாற்று நிகழ்வான அமெரிக்கா மற்றும் வடகொரியா அதிபர்களின் சந்திப்பு விரைவில் நிகழலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இதன் அடிப்படையிலேயே வருகிற ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் இடையேயான சந்திப்பு நிகழ உள்ளது. உலகளவில், சிங்கப்பூர் மட்டுமே சரியாக நிர்மாணிக்கப்பட்ட பாதுகாப்பான நகரம் என்றும் இதற்குக் காரணம் விளக்கப்பட்டது.

அணு ஆயுதம், அணு உலை, அணு ஆயுத தளம் என அணு தொடர்பான அனைத்துத் தளங்களும் மே 23-ம் தேதி முதல் 25-ம் தேதிக்குள் தகர்க்கப்படும் என்றும் தான் அளித்த ’வாக்குறுதியை நிறைவேற்றி உலகில் அமைதி திகழ வழிவகை செய்துள்ளார் அதிபர் கிம்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading தனது ஆயுதக் கிடங்கைத் தகர்த்த வடகொரியா! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அஞ்சலி நடிப்பில் இந்தியாவின் முதல் 3டி பேய் படம்- 'லிசா’!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்