இன்ஸ்ட்டாகிராமின் செயல் பைத்தியக்காரத்தனமானது - ட்ரம்ப் ஜூனியர்

இன்ஸ்ட்டாகிராமின் செயல் பைத்தியக்காரத்தனமானது - கொந்தளித்த அதிபர் மகன்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மூத்த மகன் டொனால்டு ட்ரம்ப் ஜூனியர். இவர் ட்ரம்ப்பினுடைய நிறுவனத்தை தலைமையேற்று நடத்தி வருகிறார்.

இன்ஸ்ட்டாகிராமில் தன்னைப்பற்றி #donaldtrumpjr என்ற இணைப்பிற்காக தேடும்போது, "இந்த வார்த்தைகளுக்குரிய பதிவு அல்லது இணைப்பு ஆபத்துக்கு நேராய், மரணத்துக்கு நேராய் உங்களை தூண்டக்கூடியது.

உங்களுக்கு ஏதேனும் சிரமம் இருப்பின் நாங்கள் உதவ விரும்புகிறோம்" என்ற எச்சரிக்கை செய்தி வருவதாகவும், இன்ஸ்ட்டாகிராமின் இந்த செயல் அபத்தமானது; பைத்தியக்காரத்தனமானது என்றும் கடந்த வெள்ளியன்று தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ட்ரம்ப்பின் மகன் தெரிவித்துள்ளார்.

அந்தப் பக்கத்தில் அவரது குழந்தைகளின் புகைப்படங்களும், சில அரசியல் நகைச்சுவைகளுமே உள்ளன. இன்ஸ்ட்டாகிராமின் இந்த அறிவிப்பால் தன்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை பாதிக்கப்படுவதாகவும் ட்ரம்ப் ஜூனியர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சமூக ஊடகங்கள் குறித்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்ச்சை கிளப்பி வரும் நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்ட்டாகிராம் புதிதாக இப்படி ஒரு பிரச்னையில் சிக்கியுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading இன்ஸ்ட்டாகிராமின் செயல் பைத்தியக்காரத்தனமானது - ட்ரம்ப் ஜூனியர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமெரிக்காவில் 700 அடி பள்ளத்தில் காருடன் விழுந்த பெண்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்