அமெரிக்கா - டேடோனா பீச்சில் ரோலர் கோஸ்டர் தடம் புரண்டு விபத்து

அமெரிக்காவில் பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் ரோலர் கோஸ்டர் தடம் புரண்டதில் ஆறு பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
 அமெரிக்கா ஃப்ளோரிடாவில் டேடோனா பீச் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. கடந்த வியாழன் அன்று இங்குள்ள ரோலர் கோஸ்டரின் பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரோலர் கோஸ்டரின் ஒரு பெட்டி முழுவதுமாக தடத்திலிருந்து வெளியே வந்துவிட்டது. அப்பெட்டியில் இருந்த இருவர் 34 அடி உயரத்திலிருநது நேரடியாக கீழே விழுந்ததில் படுகாயமுற்றனர்.
 
மற்றும் இருவர் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த பெட்டியில் மாட்டிக்கொண்டனர். மூன்று பெட்டிகளில் பயணித்த பத்துக்கும் மேற்பட்டோரை டேடோனா தீயணைப்புத் துறையினர் மீட்டனர். மருத்துவமனையில் ஆறுபேர் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என்று தீயணைப்புத் துறையின் செய்தி தொடர்பாளர் சஸா ஸ்டேடன் கூறியுள்ளார்.

You'r reading அமெரிக்கா - டேடோனா பீச்சில் ரோலர் கோஸ்டர் தடம் புரண்டு விபத்து Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ‘என்னம்மா.. இப்படி பண்றீங்களேமா’ - வழியில் இறக்கிவிடப்பட்ட பெண்கள்! #UBER

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்