ராணி எலிசபெத் உடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திப்பு

இங்கிலாந்து ராணி எலிசபெத்தை, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் உடன் நேற்று ராணியின் விண்ட்சர் மாளிகையில் சந்தித்தார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா, முன்னர், அந்நாட்டின் பிரதமர் தெரசா மே அவர்களை சந்தித்து இரு நாட்டு உறவு குறித்து உரையாடினார். இதையடுத்து, 92 வயதாகும் இங்கிலாந்து ராணியை அவர் நேற்று நேரில் சென்று சந்தித்தார்.

அப்போது ராணி சார்பில் ட்ரம்ப் மற்றும் மெலனியாவுக்கு டீ விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்து 25 நிமிடங்களுக்கு நடந்ததாக வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பு முடிந்ததை அடுத்து ட்ரம்ப் ஸ்காட்லாந்து புறப்பட உள்ளார்.

அங்கு அவருக்குச் சொந்தமான கோல்ஃப் மைதானத்தில் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு, ஹெல்சின்கி புறப்படுகிறார். அங்கு அவர் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சந்தித்து இரு நாடுகளுக்கு மத்தியில் நிலவி வரும் பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாட உள்ளார். நேற்று ட்ரம்ப் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் பல்லாயிரம் பேர் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading ராணி எலிசபெத் உடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 50 பொதுக்கூட்டங்களில் பங்கேற்க நரேந்திர மோடி திட்டம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்