ஃபிபாவில் ரஷ்ய போராட்டக்காரர்கள்- புதின் முன்னிலையில் உலக கவனம்!

மாஸ்கோவில் 2018 ஃபிபா கால்பந்து உலக கோப்பை இறுதிப் போட்டி நேற்று நடந்து முடிந்தது.

இந்தப் போட்டியில் க்ரோஷியாவை, பிரான்ஸ் அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இந்த ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் போது, ஒரு எதிர்பாராத சம்பவம் சிறிது நேரம் மைதானத்தையே கலங்கடித்தது. ரஷ்யாவில் தேர்தல் சமீபத்தில் தான் முடிந்து, விளாதிமிர் புதின் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு எதிராக பல போராட்டங்கள் அந்நாட்டில் நடந்து வருகின்றன.

அப்படித் தீவிரமாக போராடி வரும் அமைப்புகளில் ஒன்றுதான் ‘புஸி ரியாட்’. நேற்று ஃபிபா 2018 கால்பந்து உலக கோப்பை இறுதிப் போட்டி இரண்டாவது பாதியின் முடிவின் போது, பிரான்ஸ் 4 கோல்களுடனும், க்ரோஷியா 2 கோல்களுடனும் ஆக்ரோஷமாக விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது, திடீரென்று போலீஸ் உடையில் இருந்த சிலர் மைதானத்துக்குள் வந்து போராட்டம் நடத்தினர்.

இதனால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் மைதானத்துக்கு வந்து போராட்டம் நடத்தினர். அவர்களை அப்புறப்படுத்திய பிறகு போட்டி மீண்டும் தொடர்ந்தது. இதற்கு யார் காரணம் என்று தெரியாதிருந்த நிலையில், ‘புஸி ரியாட்’ தனது சமூக வலைதள பக்கத்தில், ‘அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்’ என்றொரு பதிவை போராட்டம் முடிந்த பின்னர் வெளியிட்டது.

மேலும், ‘நாட்டில் அரசியல் போட்டி இருக்க வேண்டும்’ என்று இன்னொரு பதிவில் தெரிவித்தது. மைதானத்தில் நடந்த போராட்டம் தங்களுடையது என்றும் ‘புஸி ரியாட்’ தெரிவித்தது. இந்தப் போட்டியை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் நேரில் கண்டுகளிக்கையில் அவரின் கவனத்தை நேரடியாக ஈர்க்கவே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

You'r reading ஃபிபாவில் ரஷ்ய போராட்டக்காரர்கள்- புதின் முன்னிலையில் உலக கவனம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஷாலினியின் உருவம் என் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது - அமைச்சர் ஜெயகுமார் 

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்