கருணாநிதி மறைவு.. தேம்பி தேம்பி அழுத விஜயகாந்த்

தேம்பி தேம்பி அழுத விஜயகாந்த்

திமுக தலைவர் கருணாநிதி மறைவை தாங்க முடியவில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கண்ணீர் மல்க வீடியோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
தைராய்டு மற்றும் குரல் வளை பிரச்சனையால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த மாதம் 7ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார். சிகிச்சை முடிந்து இன்னும் சில தினங்களில் விஜயகாந்த் சென்னை திரும்ப உள்ளார். 
 
அங்கிருந்தபடியே, கருணாநிதி மறைவுக்கு விஜயகாந்த் கண்ணீர் மல்க இரங்கல் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "நானும், கருணாநிதியும் நல்லா பழகி இருக்கிறோம். அவர் என்னை ‘விஜி’, ‘விஜி’ என்று தான் அழைப்பார். இப்போது அது எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது" எனக் கூறிவிட்டு துக்கம் தாங்க முடியாமல் விஜயகாந்த் தேம்பி தேம்பி அழுதார்.
 
"நான் அமெரிக்காவில் இருந்தாலும் என்னுடைய எண்ணங்களும், நினைவுகளும் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. கருணாநிதி இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. அவரை இழந்துவாடும் குடும்பத்தாருக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என பேசியுள்ளார்.
 
அவரை தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், "தி.மு.க தலைவர் தலைமையில் தான் எங்கள் திருமணம் நடந்தது. அதை எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது. தி.மு.க. தலைவரும், இந்தியாவின் மூத்த அரசியல்வாதியுமான கருணாநிதியின் மறைவு ஈடு இணையில்லாதது.கருணாநிதியின் இறுதி சடங்குகளில் பங்குபெறாதது மிகுந்த வேதனை அளிக்கிறது." என வேதனை தெரிவித்துள்ளார்.

You'r reading கருணாநிதி மறைவு.. தேம்பி தேம்பி அழுத விஜயகாந்த் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வருமான வரித்துறை நோட்டீஸ்... ராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்