இன்போசிஸ் - தலைமை நிதி அதிகாரி ரங்கநாத் விலகல்

இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸின் தலைமை நிதி அதிகாரி எம்.டி. ரங்கநாத் பதவி விலகியுள்ளார்.
2015ம் ஆண்டு அப்போதைய தலைமை நிதி அதிகாரி ராஜீவ் பன்சால் பதவி விலகியதையடுத்து எம்.டி. ரங்கநாத் அந்தப் பொறுப்பை ஏற்றார். கடந்த 18 ஆண்டுகள் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், தலைமை நிதி அதிகாரியாகி தற்போது ராஜினாமா செய்துள்ளார்.
 
"நான் 15 ஆண்டுகள் ரங்கநாத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். சவாலான சூழ்நிலைகளில் கடுமையான முடிவுகளை எடுக்கக்கூடிய திறம் படைத்தவர். ஆழமான பொருளாதார அறிவு, மதிப்பை காப்பதில் உறுதியான மனம், இடையறாத செயலூக்கம் நிறைந்தவர். இன்போசிஸில் அவரது இடம் நிரப்புவதற்கு அரிதான ஒன்று," என்று இன்போசிஸ் உடன் நிறுவனர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
 
வரும் நவம்பர் 16ம் தேதி வரைக்கும் எம்.டி. ரங்கநாத், இன்போசிஸில் பணிபுரிவார்.

You'r reading இன்போசிஸ் - தலைமை நிதி அதிகாரி ரங்கநாத் விலகல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சீனாவில் தம்பதியருக்கு விரைவில் மகப்பேறு வரி ?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்