ஐ.நா. மனித உரிமை அவைக்கு இந்தியா தேர்வு

India selected for UN human rights

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கு ஆசிய பசிபிக் பகுதியிலிருந்து இந்தியா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் 193 உறுப்பு நாடுகள் உள்ளன. இவற்றுள் மனித உரிமை அவைக்கென சில நாடுகளை தேர்வு செய்வதற்கு ரகசிய வாக்கெடுப்பு நடந்தது. இதில் 18 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 97 வாக்குகளை பெறுவதன் மூலம் மனித உரிமை அவைக்கு தேர்வாக முடியும்.

ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை அவையில் ஐந்து இடங்கள் உண்டு. இந்தியாவுடன் பஹ்ரைன், பங்களாதேஷ், ஃபிஜி மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளும் முயற்சி செய்தன.

இந்தியா 188 வாக்குகள் பெற்று ஆசிய பசிபிக் பிராந்தியத்திலிருந்து மனித உரிமை அவைக்கு தேர்வாகியுள்ளது. வரும் 2019 ஜனவரி முதல் மூன்றாண்டுகளுக்கு இந்த அவையில் உறுப்பினராக இருக்கும்.

You'r reading ஐ.நா. மனித உரிமை அவைக்கு இந்தியா தேர்வு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சரணகோஷம் எழுப்பி பாஜகவினர் முற்றுகை போராட்டம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்