திறமையானவர்களுக்கு அமெரிக்காவில் கீரின் சிக்னல்!

USA Green Cards and Permanent Residence for talented people only

அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கு கிரீன் கார்டு தேவை, அங்கு வேலை செயும் இந்தியர்கள் உட்பட் அனைவரும் கிரீன் கார்ட்டுக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.

அமெரிக்காவில் மிக அதிகாமன திறமை உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் அடிப்படையில் இபி-1 பிரிவு குடியுரிமை குறுகிய கால காத்திருப்பில் வழங்கபட்டுள்ளது. இந்நிலையில் தான் அமெரிக்காவில் இந்தியர்கள் உட்பட திறமை வாய்ந்த நூற்றுக்கணக்கான பணியாளர்கள் விரைவில் கிரீன் கார்டு  பெற இருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பலர் நீண்ட நாட்களாக காந்திருந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது, எல்லா விதிமுறைகளையும் சரியாக பின்பற்றியிருந்தால் விரைவில் அமெரிக்காவிற்கு வரலாம் என வெளியிட்டுள்ளார்.

லட்சக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது, இந் நிலையில் திறமை வாய்ந்த தொழிலாளர்கள் அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற்று சட்டபூர்வமாக நுழைபார்கள் என்று தெரிவித்துள்ளார், சட்டத்திற்கு புறம்பாக நுழைபவர்களை விட் திறமையானவர்களை அனுமதிப்பது நாட்டுக்கு நன்மை என்றும் கூறியுள்ளார் அதிபர் டிரம்ப்

சட்டதிட்டங்களை மீறி எங்கள் பெருந்தன்மையை உடைப்பதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

 

 

You'r reading திறமையானவர்களுக்கு அமெரிக்காவில் கீரின் சிக்னல்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தர்மபிரபுவாக மாறிய யோகிபாபு !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்