அமெரிக்காவில் பற்றி எரியும் காட்டுத் தீ- 9 பேர் பரிதாப பலி

California wildfires: more than 150000 people evacuated

அமெரிக்கா வட கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பாரடைஸ் அருகே வியாழக்கிழமை அதிகாலை காட்டுத் தீ ஏற்பட்டு வேகமாக பரவியது. தீ மேலும் பரவுவதை தொடர்ந்து அங்குள்ள மக்கள் பாதுகாப்பன இடங்களுக்கு வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள்.

அமெரிக்கா வட கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பாரடைஸ் அருகே வியாழக்கிழமை அதிகாலை காட்டுத் தீ ஏற்பட்டு வேகமாக பரவியது. தீ மேலும் பரவுவதை தொடர்ந்து அங்குள்ள மக்கள் பாதுகாப்பன இடங்களுக்கு வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள்

கலிபோர்னியா மாகாணம் காட்டுப்பகுதி நிறைந்து இருக்கும் கடந்த ஒரு வருடமாக அங்கு மழை குறைவாக பெய்ததாலும் வறண்ட வெப்ப நிலை காரணத்தாலும் காட்டு தீ ஏற்பட்டு பல ஏக்கர் காடுகளையும், நகர்புறத்தையும் தீக்கிரையாக்கி வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமை(8.11.2018) காலை கலிபோர்னியாவில் மக்கள் வசிக்கு பாரடைஸ் நகரில் சுமார் 27,000 மக்கள் வசித்து வரும் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் காட்டுத் தீ உருவானது,மேலும் 56 கீலோமீட்டருக்கு மேல் காற்று பலமாக வீசியதால் 6 மணி நேரத்திற்குள் சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவிற்கு காட்டுத் தீ பரவியது, இதனால் மரங்கள், வீடுகள், கட்டிடங்கள் காட்டுத் தீ தீயில் சிக்கி தீக்கிரையாக்கின.

காட்டுத் தீ  மேலும் அதிகமாக பரவிவருவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகிறார்கள், தீயில் சீக்கி பாரடைஸ் நகரில் உள்ள மருத்துவமனை எரிந்து சாம்பலானது. அங்குள்ள நோயாளிகளை ஹெலிகாப்டர்கள் உதவியுடன் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றபட்டுவிட்டதால் பெரும் உயிர் சேதம் தடுக்கப்பட்டது.

காற்று பலமாக வீசுவதால் தீயணைப்பு வீரர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இந் நிலையில் ஒன்பது பேர் தீயில் பலியாகி உள்ளார்கள் என தெரியவந்துள்ளது. இந்த காட்டுத் தீ பாரடைஸ் நகரைத் தொடர்ந்து அடுத்து சிகோ நகரை நோக்கி பரவி வருகிறது எனவே அங்குள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

You'r reading அமெரிக்காவில் பற்றி எரியும் காட்டுத் தீ- 9 பேர் பரிதாப பலி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 42 வயது ஷக்கலக்க பேபிக்கும், 27வயது சாக்லேட் பாய்க்கும் டும் டும் டும்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்