கமலின் பிக்பாஸ் சீசன் 4 சொன்னபடி கேளு புரோமோ மேக்கிங் வீடியோ.. இசை அமைத்தது யார் தெரியுமா?

by Chandru, Sep 12, 2020, 09:53 AM IST

உலக நாயகனுக்குப் பிடித்தவர்கள் என்று கோலிவுட்டில் பட்டியலிட்டால் அதில் இளையராஜா, நாசர், கிரேசி மோகன், சந்தான பாரதி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரமேஷ் அரவிந்த், ஜெயராம் என்று பெரிய ஒரு பட்டியலைப் போடலாம். அந்த பட்டியலில் இடம் பிடித்தவர் இசை அமைப்பாளர் ஜிப்ரான். வாகை சூடவா படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் குறுகிய காலத்திலேயே கமலின் மனதில் இடம் பிடித்துவிட்டார். கமலின் மனதையும் கவர்ந்தவர். கமல்ஹாசன் நடித்த உத்தம் வில்லன், பாபநாசம். விஸ்வரூபம் 2 போன்ற படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.

கமலின் பாசத்தை பெற்றிருக்கும் இசை அமைப்பாளர் ஜிப்ரான் கமலின் பிக்பாஸ் 4 புரோமோக்களுக்கு இசை அமைக்கிறார். பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் 2 புரோமோக்களை கமல் வெளியிட்டிருகிறார். 2வது புரோமோவில் கமல் நடனம் ஆடியபடி நடந்து வரப் பின்னணியில் சொன்னபடி கேளு..; என்ற பாடலும் ஒலிக்கும். இது கமலின் எந்த படத்திலோ வரும் பாடலாயிற்றே என்று பலர் யோசித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த பாடல் ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான சிங்காரவேலன் படத்தில் இடம் பெற்றது. அதைச் சற்று மாற்றி பிக்பாஸ் 4க்கு பயன்படுத்தி இருந்தார் கமல். இந்த புரோமோ இசையை அமைத்தது ஜிப்ரான். தற்போது இசை அமைக்கும் மேக்கிங் வீடியோவை தந்து டிவிட்டரில் வெளியிட்டிருக்கிறார் ஜிப்ரான் .

READ MORE ABOUT :

More Bigg boss News