60 அடி உயரத் தென்னை மரத்தில் அசால்டாக ஏறிய பிரபல நடிகை.. கொஞ்சம் தப்பினால் என்னாவது? ரசிகர்கள் ஷாக்..

by Chandru, Sep 12, 2020, 09:41 AM IST

வீட்டு காம்பவுண்ட் சுவர் மீது ஏறுவதற்கே சிலருக்கு கை கால்கள் நடுங்கும். ஆனால் ஒரு நடிகை 60 அடி உயரத் தென்னை மரத்தில் அசால்டாக ஏறி அசத்தி இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல நடிகை சங்சனா சிங்.ரகளபுரம், வெற்றி செல்வன், அஞ்சான், விஞ்ஞானி, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி, குணசித்ர வேடங்களில் நடித்திருக்கிறார் சஞ்சனா. கொரோனா ஊரடங்கில் வீட்டில் முடங்கி இருந்த 5 மாத காலத்தில் தினமும் ஒரு மெசேஜ், வீடியோ என்று சமூக வலைத் தள பக்கத்தில் பகிர்ந்து தனது உடற்பயிற்சி திறமைகளை வெளிக்காட்டி வந்தார். தலைகீழாக நின்று டி ஷர்ட்டை கால்கலால் அணியும் வீடியோ சில மாதங்களுக்கு முன் வைரலானது. தற்போது தென்னை மரம் ஏறி அசத்தி இருக்கிறார்.

சேலம் அருகே உள்ள கிராமத்துக்கு மேலாளர் வெங்கட்டுடன் சென்றார் சஞ்சனா சிங். மேலாளருக்குச் சொந்தமான தோப்புக்குச் சென்று அங்கு இருந்த தென்னை மரங்களைப் பார்த்ததும் குஷியானார். தான் போட்டிருந்த துப்பட்டாவைக் கயிறு போல் சுழற்றி அதை மரம் ஏறுபவர்கள் போல் காலில் கட்டிக்கொண்டு கிடுகிடுவெனத் தென்னை மரத்தில் ஏறினார். உச்சிவரை சென்று இளநீர்களைத் தொட்டுக் காட்டியவர் பிறகு சர்ரென இறங்கினார்.

தனது இந்த சாகசத்தை வீடியோவாக பகிர்ந்திருக்கும் சஞ்சனா. இருபது வருடத்துக்கு முன் தென்னை மரம் ஏறினேன். அதற்குப் பிறகு இப்போது தான் ஏறி உள்ளேன். எனக்கு மரத்தைப் பார்த்தவுடன் சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது என்றார். சஞ்சனாவின் மரம் ஏறும் சாகசத்துக்குப் பாராட்டுக்கள் குவிந்தாலும் சிலர் அக்கறையுடன் கொஞ்சம் தவறினால் என்னாவது என்று அட்வைஸ் செய்திருக்கின்றனர்.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை