தமிழகத்தில் நேற்று புதிதாக 5519 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. 6006 பேர் குணம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் நேற்று(செப்.11) 5519 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 5பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். தமிழகத்தில் இது வரை கொரோனா பாதிப்பு 4 லட்சத்து 91,572 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 6006 பேரையும் சேர்த்தால், இது வரை 4 லட்சத்து 35,422 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 77 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 8231 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 47,918 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, கடலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து அதிகமானோருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் ஓரளவுக்குப் பாதிப்பு குறைந்து வருகிறது.
சென்னையில் நேற்று 987 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை ஒரு லட்சத்து 46,593 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 297 பேருக்கும், கோவையில் 394 பேருக்கும், சேலத்தில் 298 பேருக்கும், கடலூரில் 289 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. திருவள்ளூரில் 296 பேருக்கும், தொற்று கண்டறியப்பட்டது.செங்கல்பட்டில் இது வரை 29,804 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,720 ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று நேற்று கண்டறியப்பட்டது.தமிழகத்தில் நேற்று மட்டும் 82,891 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது வரை 57 லட்சத்து 32,526 பேருக்குச் சோதனை செய்யப்பட்டிருக்கிறது.