பிரம்மாண்ட ஸ்டேஜ், கலர்ஃபுல் ஹோம், விண்டேஜ் கமல் - பிக்பாஸ் 4 ஒரு அறிமுகம்..!

Bigg Boss Tamil: Contestant List and Episode 1 Review

by Mahadevan CM, Oct 5, 2020, 09:34 AM IST

கொரோனா என்ற ஒற்றை காரணம் தான் இந்த வருடத்தையே புரட்டிப் போட்டு விட்டது. சென்ற வருடம் இதே நாளில் சீசன் 3 பிக்பாஸின் 102வது நாள். பல மாதங்களுக்குப் பிறகு நடக்குமா? நடக்காதா? என்ற கேள்விகளுக்கு மத்தியில், அப்படியே நடந்தாலும் எந்த மாதிரியாக நிகழ்ச்சி நடக்கும் என்றெல்லாம் பல யூகங்கள். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல், பிக்பாஸ் 4 கிற்கான அறிவிப்பு வந்தவுடன், விஜய் டிவி மீண்டும் ஹாட் டாபிக் ஆனது.

பிக்பாஸ் ஹவுஸ்

பிக்பாஸ் ஹவுஸ் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஆரம்பித்தது இந்த சீசன்.. இந்த முறை வீட்டைப் பார்க்கவே அழகா இருந்தது. அவ்வளவ கலர்புல்.. எங்க திரும்பினாலும் வண்ணங்கள்.. ரொம்ப நல்ல மாற்றம். மற்றபடி வீட்டோட முக்கிய மாற்றம் வீட்டுல இருந்து வெளியே வராமல் பாத்ரூம் போக ஒரு வழி வச்சுருக்காங்க. அது ஒரு நல்ல விஷயம். மற்றபடி வீட்டில் இருக்கிற பர்னிச்சர்ஸ் எல்லாம் நல்லா ரிச்சா இருக்கு. வீடு நம்ம கண்ணுக்குப் பழக கொஞ்ச நாள் ஆகும்.அடுத்ததா பிக்பாஸ் ஸ்டேஜ்.

அடுத்ததா பிக்பாஸ் ஸ்டேஜ். போனதடவை இருந்ததை விட இன்னும் பிரம்மாண்டமா இருந்தது ஆடியன்ஸ் இல்லாம முன்னாடி பெரிய ஸ்கிரீன் வச்சு விர்ச்சுவல் ஆடியன்ஸ் ப்ளான் பண்ணிருந்தாங்க. கமல் சார் கண்ணைக் காட்டின உடனே கைதட்டுவாங்களானு தெரியல. ஐ பி எல் மாதிரி ஆடியன்ஸ் சவுண்டும் போடுவாங்களோ... அதென்ன ஆண்டவரே ஷூல லைட் எரியுது....

முதல்ல சோஷியல் வொர்க்கர்ஸ் அனைவரும் நன்றி சொல்லும் நிகழ்ச்சி. அவங்களை கமல் சார் கிட்ட பேச வச்சு. டிப்பிகல் விஜய் டிவி எபிசோட்...

ஒரு வழியா கண்டஸ்டண்ட் வர ஆரம்பிச்சாங்க. ஆனா ஒன்னு சொல்லனும் வழக்கமா crisp ஆண்டவர் இல்ல. ரொம்ப வழா வழா கொழா கொழானு பேசினாரு... அடுத்த வாரங்கள்ல பார்த்துக்கோங்க ஆண்டவரே....

கண்டஸ்டண்ட் அறிமுகத்தை ஸ்பீடா பார்த்துட்டு போகலாம்.

1. விஜய் டிவி உருவாக்கம் ரியோ..... ஒரு டான்ஸ் கொஞ்சம் ஸ்பீச். உள்ள வரப்போற எல்லாருக்கும் தெரியும் ரியோ விஜய் டிவி ஆள்னு. அதே மாதிரி உள்ள வந்தவங்க அத்தனை பேரையும் தெரிஞ்ச ஒரே ஆள் ரியோ தான். கடைசி வாரம் வரைக்கும் ஒரு டிக்கெட் கன்பார்ம்.

2. சனம் ஷெட்டி.... தர்ஷனோட கேர்ள் ப்ரெண்ட். மீடியா சர்ச்சைகளுக்கு பேர் போனவரு. நல்லா கணிர்னு எதிர்ல இருக்கற ஆளை அடிக்கறா மாதிரி இருக்கு குரல். அடிச்சு பேசாம இருந்தா சரி. ஆனா பொண்ணு ரொம்ப டிப்ளமேட்டிக். உள்ள வரவங்க அத்தனை பேரையும் அழகா வெல்கம் பண்ணினாங்க.

3. இவங்களும் விஜய் டிவி ஆளு தான். குக் வித் கோமாளில வந்த பழம்பெரும் நடிகை ரேகாவை இறக்கி விட்ருக்காங்க. அவங்க பார்க்க அப்படித்தான்யா இருந்தாங்க. அம்புட்டு மேக்கப்பு. நாளைக்கு காலைல மேக்கப் இல்லாம அவங்களை பார்க்க போறதை நினைச்சாதான் கெதக்குனு இருக்கு. அப்பா மடி, புருஷர் மடி, மகள் மடினு சொல்லிட்டு இனிமே தனித்தன்மையோட இருக்க போறதா சொல்லிருக்காங்க. பார்ப்போம்.

4. அடுத்து பாலாஜினு ஒருத்தர் வந்தாரு. செம்ம பிஸிக். பாடிபில்டர். அந்த வார்த்தைக்கு ஆண்டவர் அடிச்ச ஜோக்... சாரி ஆண்டவரே பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.... முடியல. புகழ் வெளிச்சத்துக்கு ஏங்கற ஒரு ஆள். பெண்களுக்கு பிடிக்க வாய்ப்பு இருக்கு. பார்ப்போம்.

5. அப்புறம் வந்தாங்க அனிதா சம்பத். செய்தி வாசிப்பாளர். ரொம்ப நல்லா தமிழ் பேச்க்கூடியவங்க. அதுவும் எவ்வளவு வேகமா பேசறாங்க. ஒரு மிகப்பெரிய டீவி நெட்வொர்க்ல வொர்க் பண்ணியும், நான் ரொம்ப குட்டியா இருக்கேன்னு சொன்ன போது அவங்களுக்குள்ள இருந்த தாழ்வு மனப்பான்மை வெளிய தெரிஞ்சுது. இந்த பாயிண்ட் நோட் பண்ணி வைங்க.

6. இன்ஸ்டா அழகி ஷிவானியின் வருகை. ஏதோ அங்க இங்க சில போட்டோ பார்த்துருந்தாலும் (நம்புங்கப்பா), இவ்வளவு சின்ன பொண்ணா இருக்கேப்பா... சீசன் 2 ல வந்த யாஷிகா மாதிரி கொஞ்சம் ஓங்கு தாங்கா வளர்ந்துருச்சு போல. ரொம்ப அமைதியா இருக்குது இந்த பொண்ணு... போன வருஷம் அந்த பொண்ணு கூட ஆரம்பத்துல இப்படித்தான் இருந்தது இல்லடா.....

7. அடுத்து வந்தவர் ஜித்தன் ரமேஷ். மிகப்பெரிய வெற்றியடைந்த ஆளுமையோட தோத்துப் போன வாரிசு. வீட்ல இருந்தா டைவர்ஸ் நோட்டீஸ் வந்துரும்னு சொன்னது செம்ம. இவரு என்ன செய்யறாருனு பார்ப்போம்.

8. அடுத்து வந்தவர் தான் இந்த சீசனோட எண்டர்டெயினர் நம்பர் 1... வேல்முருகன். உள்ல வந்ததுல இருந்து நல்ல எனர்ஜி.... நல்லா பாடக்கூடியவர். உள்ள இருக்கறவங்களுக்கும் நமக்கும் ஸ்ட்ரெஸ் பஸ்டரா இருபார்னு தோணுது... அவருக்கு யாருய்யா அப்படி ஒரு ட்ரெஸ் கொடுத்தது. கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாமா...

9. நெடுஞ்சாலை, மாயா திரைப்படங்களில் நடித்த ஆரி அர்ஜுனா தான் அடுத்த கண்டஸ்டண்ட். ஆளு அட்டகாசமா இருக்காரு. யோகாலாம் செஞ்சு உடம்பை கின்னுனு வச்சுருக்காரு. திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காத, வெற்றி கிடைக்காத கேட்டகிரி.... முக்கியமா சமூக ஆர்வலர்.... இதை வச்சு ரெண்டு எபிசோட் தேத்துவாங்கனு நினைக்கும் போது தான்...... நான் ஒன்னும் அழலியே கண்ணு வேர்க்குது... அவ்வளவு தான்...

10. அடுத்து வந்தவரும் புகழ் வெளிச்சத்துக்காக ஏங்குறவர். மொரட்டு சிங்கிள். நல்ல பிசிக். சோமசேகர். ஆனா உள்ள வந்தவங்க கிட்ட எல்லாம் ஐயாம் சோம், ஐயாம் சோம்னு சொல்லிட்டு இருந்தாரு. நம்மாளுக கலாய்ச்சு விட்ருவாங்களே.... அப்புறம் அன்னாரும் விஜய் டிவில 2010 ல அழகிய தமிழ் மகன் ஷோல கலந்துகிட்டவரு. இவரும் விஜய் டிவி ப்ராப்பர்டி தான்.

11. அடுத்து வந்த கேப்ரியல்லாவும் விஜய் டிவி ப்ராப்பர்டி தான். ஜோடி சீசன் 6 வின்னர். சின்ன வயசுல இருந்து பார்த்துட்டு வரோம். இன்னும் குழந்தை முகமா தான் இருக்கு. நல்லா டான்ஸ் ஆடக்கூடியவங்க என்பது நல்ல விஷயம். காலைல எந்திரிச்சதும் கண்ணுக்கு குளிச்சியா இருக்கும்ல...நான் டான்ஸை சொன்னேன்பா....

12. அடுத்த கண்டஸ்டண்டும் விஜய் டிவி செட் ப்ராப்பர்டி தான். அறந்தாங்கி நிஷா... நல்லா பேசுவாங்க தான். என்ன தான் காமெடியனா இருந்தாலும் இடம், பொருள் பார்த்து பேசனும். அங்க தான் நிஷாவுக்கு கொஞ்சம் பிரச்சினை. செடி எடுத்துட்டு போங்கனு சொன்ன உடனே நான் ஒரு கருப்பு ரோஜா சார், நீங்க சிகப்பு ரோஜாக்கள் பார்த்துருப்பீங்கனு சொன்னதும், நான் எங்க பார்த்தேன், அவங்கெல்லாம் பார்த்ததால நானிங்க இருக்கேன்னு சொன்னது அக்மார்க் கமல்தனம். இதான் வேணும் கமல் சார்.


13. வந்துட்டாய்யா வந்துட்டாய்யா.... ரம்யா வந்துட்டாய்யா.... சார்.. ரம்யா சார்.... சிரிக்குது சார்...... அப்படினு எல்லாம் வரும் நாட்களில் எழுதப்பட வாய்ப்பு இருப்பதாக பிக்பாஸ் பட்சி சொல்கிறது. இவங்களும் விஜய் டிவி செட் ப்ராப்பர்டி தான். எத்தனைபேரு..... குக் வித் கோமாளி போதே பிக்ஸ் பண்ணிருப்பாங்க போல. நடுவுல கொரோனா வந்தததும், அவ்வளவு நாள் ஏன் வெயிட் பண்ணனும்னு கலக்க போவது யாரு ஷோல உக்கார வச்சு மைலேஜ் ஏத்தி அனுப்பிருக்காங்க. கடைசி வாரம் வரைக்கும் இருந்து நம் கண்களுக்கு விருந்தளிப்பார் என்று காத்திருப்போர் சங்கம். ஹி ஹி ஹி ஹி

14 சம்யுக்தா. முதல் தடவையா இந்த பேரை கேள்விபடறேன். மிஸ் மெட்ராஸ் பட்டம் வாங்கினவங்களாம். சிங்கிள் மதர் மாதிரி தோணுது. கண்டிப்பா ஒரு டச்சிங் ஸ்டோரி ஒன்னு இருக்கும்னு தான் நினைக்கிறேன். ஒரு வெற்றிகரமான பெண் தொழில் முனைவராக இருந்து மெயின்ஸ்ட்ரீம் மீடியாவுல வரதுக்காக இந்த வாய்ப்பை தேர்ந்தெடுத்ததா சொன்னது தெளிவு...

15. அடுத்து வந்த சுரேஷ் சக்ரவர்த்தி யாருனு தெரியாதவங்களுக்கு அழகன் படம் பார்த்துருக்கீங்களா? அதுல கை, காலை உடைச்சுட்டு ஒரு கேரக்டர் எல்லாரையும் போட்டு கொடுத்துடு ஹை டெசிபல்ல கத்திட்டு இருக்குமே அந்த கேரக்டர் தான் சுரேஷ். அவரோட உண்மையான கேரக்டர் எதுனு போக போகத்தான் தெரியும். ஆனா எந்த பொருளை எடுத்தாலும் எடுத்த இடத்துல வைக்கனும்ங்கற அவரோட பர்பக்‌ஷன் கப்டிப்பா இந்த வீட்டுல அவருக்கு பிரச்சினைகள் கொடுக்கும். பார்க்கலாம்.


16. அமுல் பேபி மாதிரி ஒரு பையன் வந்தான். பேரு ஆஜித் காலிக். விஜய் டிவி சூப்பர் சிங்கர் கண்டஸ்டண்ட். கொஞ்சம் நல்லாவும் பாடுவான் போலருக்கு. வெயிட் பண்ணி பார்ப்போம்.

இந்த சீசன் கண்டஸ்டண்ட் பார்த்து இவங்க எல்லாரையும் போன சீசன்ல வந்த கேரக்டரோட ஒப்பிட்டு பார்க்கறது இயல்பான விஷயம் தான். ஆனாலும் நான் அதை ரொம்ப கவனமா தவிர்த்துட்டேன். காரணம் அப்படி செஞ்சோம்னா இந்த சீசன்ல வந்தவங்களோட உண்மையான கேரக்டர் நமக்கு தெரியாம போய்டும். இந்த சீசன்ல வந்திருக்கறவங்க ரொம்ப பேலன்ஸ்டா இருக்கறாங்கனு தோணுது. சிலருக்கு அதீத புகழ் வெளிச்சம் இருக்கு. ஆனா திறமை என்னான்னு தெரியாது. சிலரோட திறமை நல்லாவே தெரியுது. ஆனா அவங்க லைம்லைட்ல இல்ல. சிலர் வாய்ப்புக்காக வந்துருக்கலாம். இன்னும் சிலருக்கு ஏற்கனவே வெற்றி கொஞ்சம் கிடைச்சிருந்தாலும், இன்னும் வேணும்னு வந்துர்க்காங்க. ரெண்டு சூப்பர் சீனியர்ஸ், மூணு சூப்பர் ஜூனியர்ஸ். ரெண்டு சூப்பர் எண்டர்டெயினர்ஸ். நல்ல மெச்சூர்டான நபர்கள்னு நல்ல பேலன்ஸ் இருக்கு. நாளையில இருந்து நமக்கு வேட்டை காத்துட்டு இருக்கு.... இணைந்திருப்போம்.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை