Sunday, Dec 5, 2021

பிக்பாஸ் 4 இல்லத்தில் என்ன நடக்கப்போகிறது தெரியுமா ? கமல் போட்ட திட்டம் ஒன்று, போட்டியாளர்கள் போட்டிருக்கும் திட்டம் வேறு.

Bigboss 4 Kamal Haasan plan something contestant plan is another

by Chandru Oct 5, 2020, 09:56 AM IST

உலக நாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ் 4 சீசன் ஷோவை நேற்று (அக்டோபர் 4ம் தேதி) முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த ஷோவை எப்படியெல்லாம் கொண்டு செல்ல வேண்டும் என்ற சில திட்டங்கள் போட்டு வைத்திருக்கிறார் கமல். ஆனால் பிக்பாஸ்4 ஷோவில் பங்கேற்க வந்திருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வேறுசில திட்டங்கள் போட்டு வைத்திருக்கின்றனர்.நடிகைகள் ரேகா, சனம் ஷெட்டி, ஷிவானி அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஆரி அர்ஜுனா, ரியோ ராஜ், சுரேஷ், பாடகர் வேல் முருகன், டான்ஸர் கேப்ரில்லா, பேஷன் ஷோ அழகி சம்யுக்தா, மிக்ஸட் மார்ஷல் கலை வெற்றியாளர் சோமு சேகர், சூப்பர் சிங்கர் அஜீத், பாலா முருகதாஸ், அனிதா சம்பத் என 16 போடியாளர்கள் போட்டியில் பங்கேற்கின்றனர். மொத்தம் 100 நாட்கள் ஷோ நடக்கிறது.


100 நாட்களும் போட்டியாளர்கள் குடும்பத்தினரையோ தங்கள் பிள்ளைகளையோ வீட்டிற்கு சென்று சந்திக்க முடியாது பிக்பாஸ் மனது வைத்தால் ஜூம் வீடியோவில் அல்லது நேரில் அழைத்து வந்து சந்திக்க வைக்க முடியும். கமல்ஹாசனுக்கு இது ஒரு ஷோவாக மட்டுமல்லாமல் மக்களுக்கு அவ்வப்போது நாட்டு நடப்புகளை எடுத்துச் சொல்லும் உடனடி மேடையாக இருக்கும். வாரம் ஒரு புத்தகத்தை ஷோவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறார். அதற்கான புத்தகங்களை தேர்வு செய்து வைத்து விட்டார். இந்த புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களாக இருக்கும். இதில் எல்லா புத்தகத்தையும் கமல்ஹாசன் படித்து முடித்திருக்கிறார். அவர் படித்து வியந்த புத்தகங்களாகவே இது இருக்கப் போகிறது. உதாரணத்துக்கு கொரோனா காலத்தில் ஒருவர் தனிமையில் சிக்கிக் கொண்டு தந்து அனுபவத்தை பேண்டமிக் என்ற பெயரில் புத்தகமாக எழுதி இருக்கிறார். அந்த புத்தகத்தை பற்றிய அறிமுகத்தை நேற்றே சொல்லி வைத்திருக்கிறார் கமல். விருப்பு வெறுப் பில்லாமல் நியாயம் பேசப்போகும் கமல்ஹானை நேற்றே எதற்கும் சொல்லி வைப்போமே என்று போட்டியாளர்கள் புகழ்ந்து தள்ளிவிட்டார்கள். போதாக்குறைக்கு பாடகர் வேல் முருகன் உலக நாயகனைப்பற்றி ஒரு பாடலே பாடி விட்டார்.


போட்டியாளர்களில் இளவட்டங்கள் துறுதுறுவென்று செயல்படத் தொடங்கி விட்டனர். யாரும் யாரையும் காயப்படுத்தக் கூடாது என்று எண்ணத்திலிருந்தாலும் ஏதாவது சொன்னால் உடனே கோப்படுபவராக இருக்கிறார் டான்ஸர் கேப்ரில்லா. அறந்தாங்கி நிஷா அதிகமாக டோஸ் வாங்கும் போட்டியாளராக இருக்கக்கூடும். அவர் காமெடி செய்து சிரிக்க வைப்பார். ஆனால் அது ஒரு சிலைரை நக்கலடித்து செய்யும் காமெடியாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவரிடம் டோஸ் வாங்குவார். ரேகாவை பொறுத்தவரை தானுண்டு தன் வேலை உண்டு என்றிருப்பார் போலிருக்கிறது. சேர் அல்லது ஷோபாவை கண்டால் உட்கார்ந்துக் கொண்டு குசலம் விசாரிக்கத் தொடங்கி விடுகிறார்.
நீங்கள் கோப்பப்படுங்கள் என்று ரகசிய அறைக்கு அழைத்து பிக்பாஸ் கட்டளையிட்டாலும் அதற்கு ரேகா ஒப்புக்கொள்வாரா என்பது சந்தேகம்தான். ஜித்தன் ரமேஷ் யார் வம்புக்கும் போகாமல் ஒதுங்கியே நிற்கிறார். பாடகர் வேல் முருகன் தினமும் ஒரு நாட்டுபுற பாடல் பாடியே காலத்தை ஓட்டுவார். சமையல் நிபுணர் சுரேஷ் விதவிதமாக சமையல் செய்தாலும் மூக்குக்கு மேல் கோபபப்பட்டு வம்பிழுப்பது கன்பார்ம். ஆரி மரபு விதைகளை பற்றி பாடம் எடுத்தால் யாரும் கேட்கப்போவதில்லை. நல்லது சொன்னால் கேட்க மாட்டீர்களா என்ற அவர் நியாயமாக கோபப்படுவார். சனம் ஷெட்டி நடிகை ஓவியா போல் எல்லோரிடம் வலிய பேசி நல்லபிள்ளையாக பார்ப்பார். கேப்ரில்லா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, ஷிவானி, அனிதா சம்பத் அளவுடன் மோதிக்கொள்வார்கள் என பல யூகங்கள் தெரிவிக்கப்பட்டாலும் எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்று தெரியாது. ஒவ்வொவொருவரும் போட்டு வந்திருக்கும் திட்டம் என்ன என்பதெல்லாம் அவ்போது வெட்ட வெளிச்சமாகும்போது யார் யார் எப்படிப் பட்டவர்கள் என்ற சாயம் நாள்தோரும் வெளுக்க தொடங்கிவிடும்.

You'r reading பிக்பாஸ் 4 இல்லத்தில் என்ன நடக்கப்போகிறது தெரியுமா ? கமல் போட்ட திட்டம் ஒன்று, போட்டியாளர்கள் போட்டிருக்கும் திட்டம் வேறு. Originally posted on The Subeditor Tamil

More Bigg boss News