“மிங்கிள் ஆகல...நடிக்கிறாங்க...அன்பானவன் “ - முதல்நாள் பிக்பாஸில் என்னவெல்லாம் நடந்தது?

Bigg boss 4 first day review

by Mahadevan CM, Oct 6, 2020, 10:22 AM IST

பிக்பாஸ் 4

அறிமுக நாள் தொடர்கிறது. கமல் பாத்ரூம்லாம் ஏன் பூட்டி வைக்கறிங்க, இதெல்லாம் தவறுங்கனு எடப்பாடியா எடுத்துச் சொன்னதை உடனே கேட்டு "செயல்" புரிந்தார் பிக்பாஸ். பாத்ரூமை உடனடியா திறந்து விட்டாரு. அதுக்கப்புறம் ட்ரெஸ்லாம் வந்து எல்லாரும் பேக் பண்ணிட்டு இருக்க லைட் ஆஃப் ஆக எல்லாரும் தூங்கப் போக, நம்ம ஷிவானி புள்ள மட்டும், தனியா வெளிய வந்து மிட்நைட் வாக்கிங் போய்ட்டு இருந்தது. உடனே எனி ஹெல்ப்.ஷாலினி அப்படினு சுரேஷ் சக்ரவர்த்தி அங்க வந்து அப்படியே லைட்டா பேச்சு கொடுத்தாரு.

அந்த புள்ள பயந்து போய் ஒரு ஜெர்க் கொடுத்தது நமக்கே தெரிஞ்சுது. ஏதோ சும்மா பாட்டு பாடலாம்னு வந்தேனு சொல்ல, பாடு கேப்போம்னு சொல்லிட்டாரு நம்ம சுரேஷ். "கண்மணி அன்போடு" பாட்டை அவ்வளவு நல்லா பாடினாங்க ஷிவானி. கூடிய சீக்கிரம் ஆஜித் பாட்டு கத்துக் கொடுப்பான்னு தோணுது. கூடவே சுரேஷ் டயலாக்லாம் சொல்லி அபஸ்வரமா பேசிட்டு இருந்தாரு. நடு ராத்திரி எந்திரிச்சு போன ஆரி, பாத்ரூம் ஏரியால இருந்து ஒரு டவல் எடுத்துட்டு வந்து யாருக்கோ போர்த்தி விட்டாரு... அதை கரெக்டா கேட்ச் பண்ண பிக்பாஸ், நோட் பண்ணுங்கடா நோட் பண்ணுங்கடானு கண்டண்ட் டீமுக்கு சொல்லிருப்பாரா இருக்கும். அடுத்த வாரம் கமல்.சார் வந்து இதை சொல்லி முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி, குளிருக்கு டவல் கொடுத்த ஆரினு எதுனா சொல்லுவாருனு நினைக்கும் போது தான்......

நாள் 1

"வாத்தி கம்மிங் ஒத்து" பாடலோடு தொடங்கியது நாள். மொத்தமா சேர்ந்து கும்பலா ஆடினாங்க. முதல் நாள் தானே விட்ருவோம்.உள்ளுக்குள்ளே டைனிங் டேபிள் துடைச்சிட்டு இருந்த ரேகா அங்க சாப்பிட்டு இருந்த ஆரியையும், பாலாஜியையும் எழுப்பி விட்டு டேபிளை துடைச்சது கண்கொள்ளா காட்சி. கூடவே ஆஜித்தை மிரட்டி வேலை வாங்கிட்டு இருந்தாங்க.பெட்ரூம்ல படுத்துட்டு இருந்த நிஷா கண்ணாடிக்கு அந்த பக்கமிருந்த பாலாஜியைக் கண்ட மேனிக்கு திட்டிட்டு இருந்தாங்க. அதுக்கு ஷிவானி பயங்கரமா சிரிச்சுட்டு இருந்தாங்க செம்ம.

அடுத்த சீன்ல நிஷா, ரேகாவை செம்ம ஓட்டு ஒட்டிட்டே இன்னொரு பக்கம் கேமரா கூட பேசிட்டு இருந்தாங்க. செம்ம ஜாலியா இருந்தது. ஷிவானி, அனிதா ரெண்டு பேரும் விழுந்து விழுந்து சிரிச்சுட்டு இருந்தாங்க. பர்சனலா கேமரா பார்த்து பேசறதை இதுக்கு முன்னாடி செஞ்சவங்கனு பார்த்தா முதல் சீசன்ல ஓவியா ஞாபகம் வராங்க. அப்புறம் போன சீசன்ல நம்ம டார்லிங் ஷெரின்.

அடுத்து பிக்பாஸ் குரல் எல்லாரும் வெளிய வந்து ஒரு சதுரத்தைச் சுத்தி நிக்கச் சொன்னாரு. அங்க மேல கட்டிருந்த பையைத் திறந்து விட்டா பந்துகளா வந்து விழுந்தது. இப்ப நீங்கப் பந்துகளை எடுக்கலாம்னு சொன்ன உடனே ஆளுக்கு ரெண்டு, மூணு னு எடுத்து வச்சுட்டாங்க. கடைசில ரம்யாக்கு பந்து இல்ல. அவங்களை உள்ள கூப்பிட்ட பிக்பாஸ் நீங்க தான் முதல் வாரத்துக்கான தலைவினு சொல்லிட்டாரு. முகமெல்லாம் சிரிப்போட வெளிய வந்த ரம்யா ஒரு வழியா டீம்லாம் பிரிச்சு செட்டில் ஆனாங்க.

கார்டன் ஏரியால இந்த அனிதா பொண்ணு யாரது, திருடன்னு சின்ன குழந்தைங்க விளையாட்டை வளையாடனும்னு சாட் பூட் த்ரீலாம் போட்டு ஆரம்பிச்சாங்க. அதுல விளையாடினவங்க எல்லாரும் சீக்கிரமா மக்கள் மனசுல இடம் பிடிச்சுருவாங்க. தன்னை எல்லாரும் குட்டி பொண்ணுனு சொல்றாங்கனு அனிதா வருத்தபட்டிருந்தாங்க. அவங்க சுட்டிப் பெண்ணும் தான்.

இந்த வீட்டுக்குள்ள நீங்கல்லாம் வந்து 24 மணி நேரம் ஆச்சு. அதனால உங்களுக்கு பிடிச்ச ஆளுக்கு ஹார்ட் ஸ்டாம்பும், பிடிக்காதவங்களுக்கு ஹார்ட் பிரேக் ஸ்டாம்பும் அடிக்கசொன்னாரு பிக்பாஸ். மத்துவங்களுக்கு ஹார்ட் பிரேக் கொடுக்கும் போது அவங்க கூட கனெக்ட் ஆகலனு ஒத்தை வரில ரீசன் சொன்ன எல்லாரும், ஷிவானிக்கு மட்டும் ஏகப்பட்ட காரணம் சொன்னாங்க. வந்த அன்னிக்கே சம்யுக்தா கூட பெட் பிடிக்கறதுல பஞ்சாயத்தாம். அதைச் சொல்லி முதல் ஹார்ட் பிரேக் ஸ்டாம்பு குத்தி ஆரம்பிச்சு வச்சது சனம். நம்மூர்ல எப்பவுமே "Mob Mentality" னு ஒரு விஷயம் இருக்கும். கும்பல் மனப்பான்மை. நீங்க ஒரு சிக்னல் கிராஸ் பண்ணப்போறிங்க, ஆனா சிவப்பு போட்டுட்டான், முத ஆளா நீங்க சரியா வெள்ளைக்கோட்டுக்குள்ள நிறுத்தினீங்கன்னா பின்னாடி வரவனும் உங்களை மாதிரியே நிறுத்துவாங்க.

ஒன்னு ரெண்டு மிஸ் ஆகும். ஆனா பெரும்பாலும் இதைப் பாலோ செய்வாங்க. அதே சமயம் முதல்ல வந்து நிக்கறவனே கோட்டை தாண்டிப் போய் நிறுத்தினா, மீதி உள்ள அத்தனை பேரும் அதையும் தாண்டிப் போய் நிப்பாங்க. கூட்டத்துல நின்னு அடிக்கும் போதும் அப்படித்தான். முதல் அடி யாராவது அடிக்கனும். அதுக்கப்புறம் போற வரவன்லாம் அடிப்பான். அந்த மாதிரி இங்க முதல் அடியை சனம் அடிக்க, பின்னாடி வந்தவங்க எல்லாரும் அதே காரணத்தை சொல்லிட்டாங்க. நாமினேஷன் வரும் போது இதே மெண்டாலிட்டியை நாம பார்ப்போம். முதல்ல நாமினேட் செய்யறவங்க யார் பேரை சொல்றாங்களோ என்ன காரணம் சொல்றாங்களோ அதைத் தான் எல்லாரும் சொல்றாங்க. அவங்க தான் அதிக ஓட்டு வாங்குவாங்க.

மத்த எல்லாரையும் விட சின்ன பொண்ணு, ஹார்ட் பிரேக் ஸ்டாம்ப் கொடுத்து வேற யாரையும் பகைச்சுக்கறதை விட ஷிவானி ஹார்ம்லெஸ்னு தோணிருக்கலாம். ஆனா அத்தனையும் ஒரு கலவையான உணர்வோட ஏத்துகிட்டாங்க ஷிவானி. எல்லாம் நன்மைக்கே... ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி கதையா போச்சு...

ஷிவானி மேல யார் கூடவும் மிங்கிள் ஆகலனு சொன்னா மாதிரி, சனம்மேல நடிக்கறாங்கனு ஒரு பிம்பம் விழுந்துருக்கு. ஆரி மேல அன்பானவன்னு ஒரு பிம்பம் விழுது..

நாளைக்குப் பார்ப்போம்.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை