எமோஷனல் , தன்னம்பிக்கை, அம்மா சென்டிமென்ட் - ஆரம்பமே இப்படியா பிக்பாஸ்...!

Bigg boss 4 second day review

by Mahadevan CM, Oct 7, 2020, 10:50 AM IST

நாள் ஒன்றின் தொடர்ச்சியாக பாலாஜி ,நிஷாவுக்கும், ரேகாவுக்கும் ஹார்ட் பிரேக் கொடுக்க, ரேகாவோ நான் அம்மா மாதிரி செல்ல குட்டி , முத்துக்குட்டி, வெல்ல குட்டி இப்படியெல்லாம் சொல்லித்தான் வேலை செய்ய சொல்றேன்..அதிகாரம் பண்ணலைன்னு சொன்னாங்க..அடுத்து அனிதா நிஷாவைப் பார்த்து அவங்க அம்மா மாதிரி இருக்காங்க, அம்மா இந்த அக்காவைப் பார்த்து கத்துக்கணும்னு கண் கலங்கினாங்க..கூடவே நான் ஒரு இமோஷனல் இடியட்ன்னு சொன்னது மத்த எல்லாருக்கும் அவங்கள பத்தி ஒரு பாயிண்ட் கிடைக்க உதவிச்சு.

அடுத்து ஆரி, ஷிவானி, சம்யுக்தா, பாலாஜி பேச ஆரம்பிச்சாங்க..நம்மள நாம முதல்ல நம்பணுன்னு ஆரி அட்வைஸ் பண்ணாரு ஷிவானிக்கு.தனியா லான்ல நடந்த ஷிவானி கூட வாலன்டியரா வந்து ஜாயின் பண்ணாரு பாலாஜி..வாக்கிங் போலாமான்னு கேட்டு இன்னும் கொஞ்சம் ஸ்பீடா நடக்கச் சொல்லி, ஷிவானியோட ப்ரெண்ட்ஸ் பத்தி கேட்டாரு..மொத்தமாவே மூணு ஸ்கூல் ப்ரெண்ட்ஸ் மட்டும்தான், யாரையும் அவ்ளோ சீக்கிரம் நம்ப மாட்டேன்னு ஷிவானி சொல்ல பொண்ணு நிஜமாவே ரிசெர்வ்ட் இல்லேன்னா வாழ்க்கையில ரொம்ப அடிவாங்கி இருக்கும்னு தோணுச்சு..வெயிட் தூக்கிட்டே நடந்து எனக்கும் இங்க சீக்கிரமா கனெக்ட் ஆக முடியலைன்னு சொன்னார் பாலாஜி.

பன்னெண்டு மணிக்கு அனிதா சுரேஷை கூப்பிட்டு உங்கள வெச்சு கன்டென்ட் பண்ணிருக்கேன்னு சொல்லி ஹார்ட் குடுக்கறதில அவர் பிக்பாஸ்கிட்ட வாங்கின மொக்கையை நியூஸ் மாதிரி வாசிக்க, சுரேஷ் சம்பந்தமே இல்லாம சில பேர் வணக்கம் சொல்றப்போ மூஞ்சில எச்சை தெறிக்கும்ன்னு உளறிட்டு இருந்தாரு..காமெடிய என்ஜாய் பண்ணாம கடுப்பாகறது தெளிவா தெரிஞ்சுது..சுரேஷ் பப்பரப்பன்னு தூக்கிட்டு இருக்கும்போது அனிதா ஹவுஸ் மேட்ஸ் கிட்ட நடந்த சம்பவத்தை நாளைக்கு அவர்கிட்ட பேசிடனும்னு சொல்லிட்டு இருந்தாங்க..இல்லேன்னா பின்னாடி பேசற மாதிரி ஆயிரும்னு சொன்னதை நோட் பண்ணுங்கப்பா..


டே 2
பாலாஜி வேல்முருகன் சுரேஷோட குறட்டை பத்தி ஷிவானிகிட்ட சொல்லும்போதே தலைவர் பாட்டு சும்மா கிழி பாட ஆரம்பிச்சுது..வழக்கம்போல பொண்ணுங்க கிழிக்க பசங்க மொக்க ஸ்டெப்ஸ் போட்டாங்க..நடுவுல பிக்பாஸ் உடைந்த இதயங்களைச் சரி செய்ய இந்த வாரம் நாமினேஷன் பிராசஸ் தள்ளி வைக்கப்படுதுன்னு சொன்னதும் பாட்டு கன்டினியூ ஆச்சு. எல்லாரும் ஆட ரேகா மட்டும் எதையோ கிண்டிட்டு இருந்தாங்க கிட்சன்ல.

எட்டரைக்கு கிட்சன்ல ரேகா அம்மான்னு மேம்னு சொல்லவேண்டாம் ரேகா போதும்னு சொல்ல அனிதா ரேகா சித்தி ன்னு சொல்றாங்க..அதுக்குள்ள சுரேஷ் அனிதாகிட்ட கண்ணுல பொய் தெரியுதான்னு கேட்க லைட்டா ஹீட் ஆன வாக்குவாதம் ஆரம்பிக்குது..இவங்க அடிச்சுக்கும்போது யாரும் கண்டுக்கல..ரேகா ரெண்டுபேர் கையும் பிடிச்சு சமாதான படுத்த ஆரம்பிச்சாங்க..சுரேஷ் பாத்ரூம்க்குள்ள போயி பொதுவா எல்லா நியூஸ் ரீடரையும் சொல்லல..வணக்கம்ன்னு ஆரம்பிக்கறவங்கள பத்தி 2000 பேருக்குத் தெரியும் அதான் சொன்னேன்னு கேமரா கிட்ட பொலம்பினாரு..திரும்ப அனிதா சுரேஷை கூப்பிட்டு கோவம் இல்லேன்னா கை குடுங்கன்னு சொல்ல ஹாண்ட் ஷேக் பண்ணாங்க.
அழகா மேக்கப் பண்ண ரேகா நிலவே என்னிடம் நெருங்காதே பாட ஆஜித் வந்து கன்டினியூ பண்ண, செல்லகுட்டின்னு ஆஜித்துக்கு ரேகா அழுத்தமா ஒரு இச்சு கொடுத்தாங்க..

கடந்து வந்த பாதை டாஸ்க்கை ஆரி படிக்க, அதுல வாழ்க்கைல இந்த இடத்துக்கு வர என்ன கஷ்டப்பட்டீங்கன்னு எல்லாரையும் சொல்ல சொன்னாரு பிக்பாஸ்..இதை வெச்சு இந்த வீட்ல இருக்கத் தகுதி இருக்கான்னு தீர்மானம் பண்ணனும்னும் அது அடுத்த நாமினேஷன்ல கணக்கில எடுக்கப்படும்னும் குறிப்பு இருந்துச்சு.

முதல்ல வந்த வேல்முருகன், சாப்பாட்டுக்குச் சிரமப்பட்டது, இளைமை கால வறுமை பத்தி நடு நடுவுல பாடிகிட்டே சொல்ல ஷிவானி கண் கலங்க, ஒரு பச்சப்புள்ள மனசு தெரிஞ்சுது..டிபிக்கல் விஜய் டிவி மொமெண்ட்..இதற்கு தானே ஆசைப்பட்டாய் விஜய் டிவி.

அடுத்து வந்த சனம் ஒரு எதிர்பாராத விபத்து பத்தி சொல்லிவிட்டு அம்மா அப்பா தவிர யாரும் நம்மள அன் கண்டிஷனலா நேசிக்க மாட்டாங்கன்னு சொல்லி லைட்டா தர்ஷனுக்கு ஒரு குட்டும் வெச்சாங்க..இங்க இருந்தும் நிறைய எக்ஸ்பீரியன்ஸ் எடுத்துவிட்டு போவேன்னு சொன்னாங்க.

வாயெல்லாம் சிரிப்பா வந்த நிஷா அவங்களோட கதையை சுய பகடியோட சொல்ல ஆரம்பிச்சு, நிறையக் கைதட்டல் வாங்கின்னாங்க..இருட்டுக்குள்ள இருட்டையே ப்ரொபோஸ் பண்ணது எம் புருஷனாதான் இருக்கும்ன்னு சொல்லி கலாய்ச்சிக்கிட்டாலும் கலர் கம்மிங்கற காம்ப்ளெக்ஸ் கண்கூடா தெரிஞ்சுது..கலக்கப் போவது யாரு டீமை பெருமையா சொல்லி விஜய் டிவிக்கு ஒரு ஐஸ் வேற..தன் குழந்தைக்குக் காது அறுந்து போன ஆக்ஸிடென்ட் தெரியாம நடந்ததுன்னு சொல்லி அழ ஆரம்பிக்க ரியோ வந்து ஆறுதல் படுத்த கலாய்ச்சிட்டே கலைஞ்சு போனாங்க..

நாளைக்கு பார்ப்போம்..

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை