பிக்பாஸ் 4ல் இன்று நெகிழ்ச்சியும் மோதலும்.

Bigboss 4 Balaji Murugadas attack his father

by Chandru, Oct 9, 2020, 18:13 PM IST

பிக்பாஸ் 4 நிகழ்ச்சி தொடங்கி விஜய் டிவியில் மெல்ல மெல்ல சூடு பிடித்துக் கொண்டிருக்கிறது.

முதல் நாள் நல்ல பிள்ளைகள்போல் எலோருமே ஒருவருக்கொருவர் அறிமுகம் சிரிப்பு என காட்சிகள் சென்றது, பிறகு அறந்தாங்கி நிஷாவின் காமெடி பேச்சும் எல்லோரரையும் கலகலப்பாக்கியது, திடீரென்று ஒவ்வொருவரும் சொந்தக் கதைகளை சொல்லி சோகத்தில் ஆழ்த்தினர். இந்நிலையில் நேற்று வெளியான புரோமோவில் அனிதா சம்பத்தை மொட்டை சுரேஷ் வம்புக்கு இழுத்து அவரை கண்கலங்க வைத்தார். இன்று வெளியான புரோமோவில் பாலாஜி முருகதாஸ் பேசும்போது தனது பெற்றோரை கடுமையாக சாடினார். என்னை பெற்றதோடு சரி அதன்பிறகு என்னை வளர்ப்பது பற்றி அவர்கள் அக்கறை காட்டவில்லை, பெற்ற பிள்ளையை வளர்க்க முடியாவிட்டால் ஏன் பெற்றுக்கொள்கிறீர்கள் என தன்னை பெற்றோர் சரியாக கவனித்து வளர்க்காதது பற்றி கூறி அனைவரையும் நெகிழ வைத்தார்.

அவருக்கு சக போட்டியாளர்கள் ஆறுதல் கூறினர். இன்றைய எபிசோடில் பாலாஜியின் நெகிச்சியும் ரேகா, சனம் இருவரின் சண்டை காட்சியும் இருக்கும் என்று தெரிகிறது. இதற்கெல்லாம் அந்த மொட்டை சுரேஷ் என்ன ரியாக்‌ஷன் காட்டப்போகிறார் என்பதும் ஒரு எதிர்பார்ப்பாகவே இருக்கிறது.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை