பிரபல ஹீரோவுடன் காமெடி நடிகர் சூரி திடீர் மோதல் .. பண மோசடி புகாரால் திரையுலகில் பரபரப்பு.

Actor soori file cheating case against actor vishnu vishal father

by Chandru, Oct 9, 2020, 17:44 PM IST

வெண்ணிலா கபடி குழுவில் ஒன்றாக அறிமுகமாயினர் விஷ்ணு விஷால், காமெடி நடிகர். வேலன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் இந்த ஜோடி பட சூப்பர் ஹிட் ஜோடியாக அமைந்தது. திடீரென்று இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டிருப்பது திரையுலகில் அதிர்ச்சி ஏற்பட்டிருகிறது. விஷ்ணு விஷால் தந்தை முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடவாலா. இவர் மீதும், மற்றும் தயாரிப்பாளர் அன்பு வேல் ராஜன் மீதும் நடிகர் சூரி பண மோசடி வழக்கு தொடர்ந்தார். நிலம் வாங்கித் தருவதாக கூறி 2 கோடியே 70 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை கோர்ட் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து விஷ்ணு விஷால் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பற்றிப் படித்தது மிகுந்த அதிர்ச்சிகரமாகவும், வருத்தமாகவும் இருந்தது. சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது உண்மையில் சூரி, விஷ்ணு விஷால் ஸ்டூடியோவுக்கு ஒரு அட்வான்ஸ் பணத்தை திரும்பத் தர வேண்டும். கவரிமான் பரம்பரை என்ற படத்துக்காக 2017ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட பணம் அது, சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. சட்டத்தின் மீதும் நீதித் துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த நேரத்தில் இது பற்றி இன்னும் விரிவாகப் பேசுவது சரியாக இருக்காது.

நாங்கள் சட்டம் அனுமதிக்கும் பாதையில் செல்வோம். உண்மை வரும்வரை ரசிகர்களும், நல விரும்பிகளும் காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும் உண்மையான தகவல்களுடன் இது பற்றி செய்தி வெளியிட வேண்டும் என்று ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். எல்லாம் தெளிவான பிறகு சட்டப்படி சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன். இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்திருக்கிறார். அத்துடன் உண்மை ஒருநாள் வெல்லும் என்ற ஹேஷ்டேக்கை வெளியிட்டுள்ளார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை