உயர்நீதிமன்றத்தால் பறிபோன 2650 கோடி ?

by Loganathan, Oct 9, 2020, 17:35 PM IST

தமிழகம் முழுவதும் 2650 கோடி மதிப்பிலான ஊராட்சி சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கான அறிவிப்பாணையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

மத்திய அரசின் 14 வது நிதிகுகுழுவின் பரிந்துரையின் பேரில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த நிதி ஒவ்வொரு ஊராட்சிக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிதியை ஊராட்சி மன்றத்தின் மூலமாக, அந்தந்த ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற ஊராட்சிக்கு பஞ்சாயத்து ராஜ் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் ஊராட்சி மன்ற தீர்மானங்கள் இல்லாமலேயே, தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறையானது, அலுவலர் மூலமாக தன்னிச்சையாக திட்டங்களை நிறைவேற்ற வருகின்றனர். ஊராட்சி மன்ற ஒப்புதல் இல்லாமலும், கிராம சபையின் ஒப்புதல் இல்லாமலும், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும் தமிழக அரசு அதிகாரிகள் மூலமாகவே திட்டங்களை தேர்ந்தெடுத்து செயல்படுத்தி வருகின்றன.

இதனை ரத்து செய்யுமாறு திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஊராட்சியை சேர்ந்த ஜோதிமணி குமரேசன் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி ஊராட்சி மன்றங்களின் ஒப்புதல் இல்லாமல் அறிவிக்கப்பட்ட ஊரக சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கான அறிவிப்புகளை ரத்து செய்வதாக தீர்ப்பு வழங்கினார்.

Get your business listed on our directory >>More Tamilnadu News