கொரோனா ஊரடங்கால் அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் கடந்த 5 மாதமாக முடங்கி இருந்தது. இதில் சிம்பு நடித்து வந்த மாநாடு படமும் முடங்கியது. ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் கழித்து வந்தார் சிம்பு, உடல் எடையை குறைக்க கடும் பயிற்சிகள் செய்துவந்தார். புதிய பட ஸ்கிரிப்ட்கள் கேட்டார். கவுதம் மேனன் இயக்கிய கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தில் திரிஷாவுடன் வீட்டிலிருந்தபடியே நடித்தார்.
மேலும் சுசீந்திரன் இயக்கத்தில் கிராமத்து பின்னணியிலான படத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார். 30 நாட்களில் இப்படத்தை முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது அதற்கான படப்பிடிப்பும் தொடங்கியது. வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்குகிறது. சிம்புவுக்கு அவரது அப்பா டி.ராஜேந்தரைப்போலவே கடவுள் பக்தி அதிகம். வீட்டில் நின்ற இடத்திலும் இருக்கை அருகிலும் சாமி படங்கள் இருக்கும். நிற்கும்போதும் அமரும்போதும் சாமி கும்பிட்டுவிட்டு தான் அடுத்த வேலையை தொடங்குவார். சிம்பு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாட்டு காட்டுவதுடன் திடீரென்று ரஜினிகாந்த் போல் இமய மலைக்கும் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வருகிறார். கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கிற்கு பிறகு வெங்கட்பிரபு, சுசீந்திரன் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ள சிம்பு முன்னதாக இன்று மதுரை மீனட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். அங்கு கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து சாமி கும்பிட்டார். சிம்பு மதுரை கோயிலில் தரிசனம் செய்ய வந்த படம் நெட்டில் வைரலாகி வருகிறது.