பாலாஜி கேட்டக் கேள்வி, மிகவும் முக்கியமான ஒன்று - பிக்பாஸில் என்ன நடந்தது - நாள் 5 ...!

Advertisement

முந்தின நாள் தொடர்ச்சி தான். அதே கிச்சன் டீம், அதே கிச்சன், அதே பிசிபேளாபாத், அதே பஞ்சாயத்து. ஏதோ ஒரு படத்துல விவேக் சொல்லுவாரு இல்லையா, இந்த புளிச்ச தயிர்ச்சாத தொல்லை தாங்க முடிலனு அந்த மாதிரி ஆகிப்போச்சு. ரேகா ஏதோ குளறுபடி பண்ணிட்டாங்க. அதை கேட்ச் பண்ணின சனம் இதுல ஸ்கோர் பண்ண முயற்சி பண்றாங்களோனு தோணுது. நீங்க தான் குக்கிங் டீம் வேணாம்னு சொல்லிட்டீங்க இல்ல, மறுபடியும் எதுக்கு அங்க போனீங்கனு கேட்ட கேள்விக்கு சுரேஷ் ரொம்ப மழுப்பலா பதில் சொல்லி, மறுபடியும் ரேகாவை கை காமிச்சு விட்டாரு. சனமும் இதை விடறதா இல்லை.

சனம், ரேகா, ரம்யா பேசறதை படுத்துட்டே வேடிக்கை பார்த்துட்டு இருந்தாரு. ஒரு இடத்துல வேலை செய்யும் போது நம்ம தான் இங்க எல்லாமே, நம்ம இல்லேன்னா இங்க ஒன்னும் நடக்காதுனு நமக்கு தோணறது இயற்கையான விஷயம். ஏதோ ஒரு காரணத்துக்காக அங்க இருந்து வெளிய வந்ததுக்கு அப்புறம், அந்த இடத்துல பிரச்சனை வரனும், நம்ம இல்லாததை அவங்க உணரனும்னு நினைக்கறதும் மனித இயல்பு தான். ஆனா இத்தனை வயசுக்கு அப்புறம் சுரேஷ் அப்படி நினைக்கறது தான் ஆச்சரியமா இருக்கு. தான் இல்லாத இடத்துல பிரச்சனை வரனும்னு எதிர்பார்க்கறாருனு சொல்றதை விட, பிரச்சினையை இவரே தூண்டி விடறாருனு தான் சொல்லனும்.

அனிதாவுடனான தனிப்பட்ட விரோதத்தை இன்னும் வளர்த்துட்டே இருக்காரு. அதுக்காக மத்தவங்களுக்கும் அனிதாவை வில்லியாக்க முயற்சி செய்யறது அவர் வயசுக்கேத்த வேலையில்லை. அவ்வளவு தான். இங்க யாரும் சின்னக் குழந்தை இல்லை. அதுவும் விஷம்னு அனிதாவை ரெபர் செய்யறதெல்லாம் அதீதம். ரம்யா, சனம் கிட்டப் பேசி முடிச்சுட்டு போன ரேகா நேரா அனிதா கிட்டப் போய், சுரெஷ் தான் காய்கறி வெட்டறதுக்கு வந்தாருனு சொன்னதைக் கேட்டுச் சிரிப்பு தான் வந்தது. அதை அங்க சொல்லாம ஏன் இங்க வந்து சொல்றிங்கனு கேட்டது தான் இங்க அனிதாவோட கேரக்டர்னு நான் பார்க்கிறேன்.

அடுத்தது சோம் சேகரோட கதை. தன்னுடைய உடல்கோளாறை தாழ்வுமனப்பான்மையால் மறச்சதை எல்லாருக்கும் முன்னாடி சொன்னது நல்ல விஷயம். கூடவே அந்தளவு கம்பர்ட்டபிளா வச்சுருக்கற ஹவுஸ்மேட்ஸ்க்கு நன்றி சொன்னதும் டச்சிங்கா இருந்தது. தான் ஒரு ராப் பாடகர்னு சொல்லி, ஒரு பாடலும் பாடினார்.

நைட்டு சுரேஷுக்கு ஏதோ ஹெல்த் பிரச்சனை போலரு. அதுக்கு ரியோவை கூப்பிட்டு அனுப்பிய பிக்பாஸ், லேடீஸ் ரூம்ல யாரையாவது வெளிய படுக்க சொல்லிட்டு, சுரேஷை பெட்ல படுக்க வைக்க சொல்றாரு. ஏற்கனவே பேய் முழி முழிக்கற ரியோ இதுக்கும், அது ஏண்டா என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்டனு ரியாக்சன் கொடுத்தாரு. வெளிய வந்து சுரேஷ் கிட்ட சொல்ல அவரு வழக்கம் போல அடம் பிடிக்க, நிஷாவும், ரியோவும் சேர்ந்து அவரை பெட்ல படுக்க வைக்கறதோட நாள் முடியுது.

நாள் 5

இன்னிக்கு பாட்டுக்கு யார்கிட்டேயும் பெருசா ரியாக்சன் இல்ல. ஏதோ அங்கங்க ஆடிட்டு இருந்தாங்க. மேக்கப் இல்லாம, தூங்கி எழுந்த முகத்தொட அழகா இருந்தாங்க சம்யுக்தா....அடுத்து ஆஜித் கதை. ரொம்ப சின்ன வயசுல இருக்கறவங்க கிட்ட என்ன கதை இருக்கப் போகுது. அறியாத வயசுல கிடைச்ச புகழ், விபரம் தெரியும் போது இல்லேன்னு ஆனதுக்கு அப்புறம் என்ன ஆச்சுனு சுருக்கமா சொன்னாரு.

அடுத்து ரம்யா பாண்டியன். தன் தந்தை இறப்புல இருந்து பேசினாங்க. எங்கேயும் உணர்ச்சிவசப் படலை. ஹீரோயினை மாத்தி ஏமாத்தினதை கூட சிரிச்சுட்டே சொன்னது பாசிட்டிவ் பக்கம்.

அடுத்து பாலாஜியோட கதை. ரொம்ப டிஸ்டர்ப் செஞ்சதுனு தான் சொல்லனும். பெற்றோர்கள் சரியில்லாத ஒரு பையன். போன வருஷம் முகின் இதே கேட்டகிரில தான் இருந்தான். அன்பு, பாசம்னு செண்டிமெண்ட் பேசாம ஜெயிச்ச கதையைச் சொன்னது நல்ல விஷயம். உங்க 15 பேரையும் பார்த்து பொறாமையா இருக்குனு சொன்னதும் உணர்வுப்பூர்வமா இருந்தது. பெற்றோர்களைப் பார்த்துக் கேட்ட கேள்வி, இன்னிக்கு நிறையப் பெற்றோர்களுக்குத் தேவையான ஒரு கேள்வி. பெத்தவங்க சரியில்லனு தவறான பாதைல போகாம, தனக்குனு ஒரு அடையாளத்தை உருவாக்கின பாலாஜி உண்மையிலேயே இன்றைய இளைஞர்களுக்கு ஒரு ரோல்மாடல் தான். அவரோட பங்கு இந்த பிக்பாஸ்ல கண்டிப்பா அதிகமா இருக்கும்னு தான் தோணுது.

இதோட கடந்து வந்த பாதை டாஸ்க் முடிஞ்சுது. எப்பவும் ரெண்டு மூணு வாரம் கழிச்சு செய்யற டாஸ்க்கை ஏன் இந்த தடவை முதல் வாரமே கொடுத்தாங்கனு நிறையக் கேள்விகள். இந்த முறை சோஷியல் மீடியா, சினிமா, டிவினு கண்டஸ்டண்ட் அறிமுகம் இருந்தாலும், அவங்களோட பர்சனல் பக்கங்கள் ஆரம்பத்துலேயே தெரியும் போது, அவங்களை புரிஞ்சுக்க நமக்குமொரு நல்ல வாய்ப்பு. இந்த பிக்பாஸ் வீட்ல இருக்க தகுதியில்லாதவங்கனு அடையாளம் காட்டப்பட்ட 8 பேரும் எப்படி தங்களை வெளிப்படுத்திக்க போறாங்கனு பார்க்கனும்.

ஏற்கனவே 4 பேரை செலக்ட் செஞ்ச மாதிரி இந்த முறை தகுதி இல்லாதவங்களை செலக்ட் செய்யச் சொன்னார் பிக்பாஸ். கேப்பியும், ஆரியும் தான் டிசிஷன் மேக்கிங்ல இருந்தாங்க. சுரேஷ், ஷிவானி, ஆஜித், ரம்யா 4 பேரையும் செலக்ட் பண்ணி அனவுன்ஸ் செஞ்சது சம்யுக்தா...மறுபடியும் கிச்சன். இந்த முறை மற்றவங்க எல்லாரும் சேர்ந்து சாப்பாடு வேஸ்டாகறதை பத்தி ரொம்ப வருத்தப்பட்டு பேசிட்டு இருந்தாங்க. இதுக்கு ஒரு பஞ்சாயத்து இருக்கு.

லைட்டெல்லாம் ஆஃப் செஞ்சதுக்கு அப்புறம் வெளிய தன் மடில ரியோ படுத்திருக்க அம்மா பாட்டு பாடிட்டு இருந்தாரு வேல்முருகன். ரொம்ப உருக்கமா இருந்தது அந்த பாட்டு. கொஞ்ச நேரம் கழிச்சு தான் ப்க்கத்துல அனிதா இருந்தது தெரிஞ்சுது. வேல்முருகன் பாடப் பாட இன்னும் உருக்கமா இருந்தது. கண்ணு கலங்கி இருந்த அனிதா ஒரு கட்டத்துல வெடிச்சு அழுகறதோட நேற்று நாள் முடியுது....

நேத்து முழுக்க அனிதா சீன்லேயே இல்லைங்கறதும் நோட் செய்ய வேண்டிய பாயிண்ட்.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90
/body>