தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையவில்லை.. 5 மாவட்டங்களில் அதிகரிப்பு..

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்படுகிறது. நேற்று (அக்.9) 5185 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 19 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். மாநிலம் முழுவதும் இது வரை 6 லட்சத்து 46,128 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.

அதே சமயம், தொற்றில் இருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5357 பேரையும் சேர்த்து, இது வரை 5 லட்சத்து 91,810 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 68 பேர் பலியானார்கள். மொத்தத்தில் இது வரை 10,120 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 44 ஆயிரத்து 197 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் நேற்று புதிதாக 1288 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 147 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 79,424 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 343 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 255 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இது வரை 38,807 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 34,388 பேருக்கும் தொற்று பரவியிருக்கிறது.

கோவை மாவட்டத்தில் புதிதாக 397 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 137 பேருக்கும் சேலத்தில் 295 பேருக்கும், திருப்பூரில் 159 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 147 பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 246 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 113 பேருக்கும், வேலூர் மாவட்டத்தில் 133 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் 150 பேருக்கும், நீலகிரி மாவட்டத்தில் 109 பேருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானோருக்குத் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் பலி எண்ணிக்கை தமிழகத்தை விடக் குறைவாகவே உள்ளது. தமிழகத்தில்தான் கொரோனா பலி 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, சேலம் மாவட்டங்களில்தான் இறப்பு அதிகமாக உள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :