கேப்டன்சி டாஸ்க் , கண்கலங்கிய சுரேஷ், அடுத்த வார தலைவர் யார் ? பிக் பாஸ் நாள் 12

Advertisement

மரணம் மாஸு மரணம் பாடலோடு ஆரம்பிச்சது நாள். அனிதா மட்டும் தனியா சோலோ பர்பாமன்ஸ் கொடுத்துட்டு இருந்தாங்க. அப்புறமா ஷிவானி மட்டும் வந்தாங்க. இன்னும் சிலர் பெட்ரூமுலேயே ஆடினாங்க.காலையிலேயே சம்மு தன் பையனை நினைச்சு கண் கலங்கினாங்க. கொஞ்சம் சமாதானப்படுத்தவும், கேமராவை பார்த்து ஐயாம் ஓக்கே சொல்லி சிரிச்சாங்க.

அடுத்து லக்சரி பட்ஜெட் டைம். காலையில பாட்டு போட்டதுக்கு அப்புறமும் எந்திரிக்காம இருந்தது, பிக்பாஸ் கூப்பிட்டதுக்கு அப்புறம் ஆடி அசைஞ்சு வந்ததை எல்லாம் கிரைம் கணக்குல சேர்த்து 200 பாயிண்ட் மைனஸ் பண்ணிட்டாரு. இது முதல் தடவைங்கறதால குறைவா மைனஸ் பண்ணிருக்கேன், அடுத்த தடவை நான் இன்னும் உக்கிரமா இருப்பேன்னு ஓலை அனுப்பிருந்தாரு பிக்பாஸ்.

அடுத்து லக்சரி பொருள்கள் செலக்ட் செய்யும் நேரம். அனிதா சொல்ல, சனம், ரியோ எழுதனும். அனிதா சொல்லி முடிச்சதுக்கு அப்புறம் "இப்ப என்ன சொன்னனு" கேட்ட சனம் பார்த்து கொலை வெறி ஆகிருப்பாங்கனு நினைக்கிறேன். சிலருக்கு மத்தவங்க சொல்லி எழுதும் போது ரெண்டு தடவையாவது சொல்லனும். சனம் அந்த கேட்டகிரி போல. ரியோவை பொறுத்தவரைக்கும் கொஞ்சம் பரபரப்பா வேலை செய்யும் போது அவன் குரல் மாறுது. அதை மத்தவங்க கேக்கும் போது ரியோ கோபப்படற மாதிரி தோணலாம். ஆனா அது கோபம் இல்லை. வரும் நாட்கள்ல அந்த குரல் என்னை ஹர்ட் பண்ணிருச்சுனு யாராவது பிராது வைப்பாங்க. நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்.

ஒரு வழியா 3000 பாயிண்டுக்கு 2940 பாயிண்டுக்கு லிஸ்ட் போட்ருந்தாங்க. கடைசி நேரத்துல ஏற்கனவே எழுதிருந்த ராகியை மறுபடியும் எழுதி கன்ப்யூஸ் செஞ்சாங்க சனம். பட்ஜெட் கேன்சல் ஆகிருந்தா வேல்ஸ் கிட்டச் சொல்லி சனமை முறுக்கு பிழிஞ்சுருப்பாங்க ஹவுஸ்மேட்ஸ். ஜஸ்ட் எஸ்கேப்.

ஆட்டம் கொண்டாட்டம் டாஸ்க்ல சிறந்த பர்பாமர் தேர்ந்தெடுக்கும் நேரம். போன சீசன்ல இந்த இடத்துல தான் அதிகபட்ச பிரச்சனை வந்தது நினைவிருக்கலாம். முதல்ல சொல்லப்படற பேரை எல்லாரும் ரிபீட் பண்ணிட்டு இருந்தாங்க. இந்த தடவை அப்படி இல்லாம வோட்டிங் முறைல தேர்ந்தெடுத்தாங்க. இதை முன்னெடுத்த அர்ச்சனாவுக்கு வாழ்த்துகள்.

கேப்பி, வேல்ஸும் பெஸ்ட் பர்பாமர் கேட்டகிரி. அடுத்து வாரம் முழுவதுக்குமான பெஸ்ட் பர்பாமர் தேர்ந்தெடுக்கவும் அதே வோட்டிங் தான். முதல்ல நாலு பேரை நாமினேட் செய்ய சொல்லி அவங்களுக்கு வோடிங் பண்ணின ஐடியா செம்ம. மீண்டும் அர்ச்சனா ஸ்கோர் செஞ்ச இடம். கமல் சார் கிட்ட ஷொட்டு வாங்க வாய்ப்பு இருக்கு. கடைசி பேராக சொல்லப்பட்ட ரியோ பெஸ்ட் பர்பாமர் ஆனது அவருக்கே அதிர்ச்சி.

அடுத்து வொர்ஸ்ட் பர்பாமர் தேர்ந்தெடுக்கும் போது தான் வழக்கம் போல ஆமை தன் தலையை உள்ள இழுத்துக்கறா மாதிரி எல்லாரும் சைலண்ட் மோட்ல போய்ட்டாங்க. மறுபடியும் அர்ச்சனாவே முன்வந்து, சரியா வேலை செய்யாதவங்க, அவங்களே முன்னாடி வாங்கனு சொல்லவும், பாலா ஷிவானி கை தூக்கினாங்க.

பாலாவுக்கு சப்போர்ட் செஞ்சு ஒரு பேருரை ஆத்தினாங்க ரேகா... அவங்களை உக்காரவைக்க ரொம்ப கஷ்டபட்டாங்க அர்ச்சனா. அப்புறம் ஒருவழியா ஷிவானி, ரமேஷ் ரெண்டு பேரும் தேர்ந்தெடுக்கபட்டாங்க. இறுதி முடிவை உறுதிபடுத்திகிட்ட பிக்பாஸ், அவங்க ரெண்டு பேரையும் "ஓய்வெடுக்கும் அறைக்கு" அனுப்பச் சொன்னதும், ஹவுஸ்மேட்ஸ்க்கு அதிர்ச்சி. "ஜெயில்"னு சொல்லாம "ஓய்வெடுக்கும் அறைனு சொன்னது நமக்கு அதிர்ச்சி. வொர்ஸ்ட் பர்பாமரை ஓய்வெடுக்க அனுப்பி தண்டனை கொடுத்தது உலகத்துலேயே நம்ம பிக்பாஸா தான் இருக்கும். உடனடியா அவங்க ரெண்டு பேரையும் ரூம்ல அடைச்சு வச்சாங்க.

அடுத்து இந்த வார தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வேலை. கேப்பி, வேல்ஸ், ரியோ மூணு பேரும் தலைவர் பதவிக்கான கேண்டிடேட்ஸ். ஒவ்வொருத்தர் பேரா சொல்லி யாரெல்லாம் ஆதரவளிக்கறவங்களை எழுந்து நிக்க சொன்னாரு. கேப்பி பேரைச் சொல்லும் போது, சுரேஷ் மட்டும் எழுந்து நின்னாரு. வேல்ஸ், ரியோக்கு நிறைய ஆதரவு இருந்தது. அங்க தான் ஒரு சூப்பர் டிஸ்ட் வச்சாரு பிக்பாஸ்.

தலைவராகரதுக்கு ஆதரவு தெரிவிச்சவங்க, அவங்களை தூக்கி சுமக்கனும்னு போட்டி வச்சுட்டாரு.

ரியோவுக்கு பாலா, வேல்ஸ்க்கு ஆரி ரெடியாக, மத்தவங்க சப்போர்ட் செய்யவும் ஆள் இருந்தது. தனியா இருந்த சுரேஷ் தானும் ரெடியாக, கேப்பி ஒத்துக்கவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க. அதட்டி, உருட்டி, மிரட்டிச் சமாதானப்படுத்தி கேப்பியை தூக்கினாலும், கேப்பி அரை மனசா தான் இருந்தாங்க. மத்தவங்க எல்லாரும் சொல்லியும் சுரேஷ் பிடிவாதமா இருந்தாரு.

சைரன் ஒலிக்கவும் மார்க் பண்ணிருந்த இடத்துல அவங்கவங்க ஆதரவு தெரிவிச்சவங்க நிக்கனும். பாலாஜி ரியோவை தூக்கிச் சுமக்க மத்தவங்க எல்லாரும் ரியோ மேல கை வச்சுட்டு சப்போர்ட்டுக்கு இருக்கனும். அதே மாதிரி இந்த பக்கம் ஆரி, வேல்சை தூக்க மத்தவங்க எல்லாரும் சப்போர்ட். கேப்பியும் அரை மனசா சுரேஷ் மேல ஏறிகிட்டாங்க. ஒரு பெண்ணா கேப்பிக்கும் சங்கடமா தான் இருந்திருக்கும்.

9 நிமிஷம் வரைக்கும் தாக்கு பிடிச்ச சுரேஷ் மேல இருந்து கேப்பியே இறங்கிட்டாங்க. இறங்கியும் ரொம்ப அழுகை தான்.1 மணி நேரம் கடந்தும் பாலாவும், ஆரியும் நிக்க, ஒரு கட்டத்துல ரேகா வேல்ஸ் மேல இருந்து கை எடுத்ததால, ரியோ ஜெயிச்சதா சொல்றாரு பிக்பாஸ்.

கேப்பிக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருக்காரு சுரேஷ். கூடவே பாலாவும், ஆஜித்தும். போட்டிக்கு முன்னாடியே இவங்க ரெண்டு பேர்கிட்டேயும் ஆதரவு கேட்ருப்பாங்க போல. ஆனா பாலாஜி கேப்டன்சி உனக்கு வேணாம்னு சொல்லிருக்காரு. அப்ப அர்ச்சனா ஏதோ ஆயின்மெண்டோட வந்து, சுரேஷ் கைல தேய்க்கவும், வலில கண் கலங்கிட்டாரு சுரேஷ். அதைப் பார்த்து கேப்பி இன்னும் அழுதாங்க.

அடுத்து கேப்பியை சமாதானபடுத்தனும்னு ஆஜித்தும், பாலாவும், கிச்சன்ல உக்காந்து பேசிட்டு இருந்தாங்க. கேப்பி சொல்றது புரியலைனு சொல்லவும், "உனக்கு எது தான் புரியுது" னு நோஸ்கட் பண்ணிருச்சு கேப்பி... அடேய் பாலா... இந்த அவமானம் உனக்கு தேவையா?வெளிய உக்காந்து மீண்டும் ஒரு அட்டகாசமான பாட்டு பாடிட்டு இருந்தார் வேல்ஸ்.கேப்பி குட்நைட் பிக்பாஸ் சொல்லவும், லைட்டை அணைச்சு நாளை முடிச்சு வச்சாரு பிக்பாஸ்.

இன்னிக்கு ஆண்டவர் வருகை. சுவாரஸ்யமான சம்பவங்கள் நடக்குமானு வெயிட் பண்ணுவோம்.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90
/body>