வெளுத்து வாங்கிய மும்பை! தொடர்ந்து சொதப்பும் கொல்கத்தா!

Bleached Mumbai! Kolkata continues to lose!

by Loganathan, Oct 17, 2020, 11:13 AM IST

கொல்கத்தா அணியின் தொடர் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று, அணியின் கேப்டன் பதவியிலுருந்து விலகுவதாக தினேஷ் கார்த்திக் மற்றும் அணியின் நிர்வாகமும் அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து இயான் மோர்கன் கேப்டனாக பொறுப்பேற்றார்.கேப்டனாக பொறுப்பேற்ற பின்பு மும்பை உடன் முதல் போட்டி நேற்று அபுதாபியில் நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

கொல்கத்தா அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான திரிபாதி (7), ஷுப்மான் கில் (21), ராணா (5), கார்த்திக் (4) என அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆக 42/4 எனக் கொல்கத்தாவின் நிலைமை படுமோசமானது.

கேப்டனாக பொறுப்பேற்ற மோர்கனுக்கு முதல் போட்டியே சோதனையாகத் தொடங்கியது. பின்னர் களமிறங்கிய ரஸுலும் 12 ரன்களில் அவுட் ஆக 61/5 என்ற பரிதாப நிலையில் இருந்தது.

ஒரு கட்டத்தில் 100 ரன்களையாவது தொடுமா என்ற நிலையில் கேப்டானாக பொறுப்பாக ஆடினார் மோர்கன். மோர்கன் மற்றும் கம்மின்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியைச் சரிவில் இருந்து மீட்டது. மோர்கன் 29 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்சர் என 39 ரன்களை விளாசினார். இவருடன் கைகோர்த்த பேட் கம்மின்ஸ் 36 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சர் என 53 ரன்களை விளாசினார் . இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் கொல்கத்தா அணி இருபது ஓவர் முடிவில் 148/5 ரன்களை எட்டியது.

மும்பை அணியின் பந்து வீச்சாளர்கள் நேற்றைய போட்டியில் நேர்த்தியாகச் செயல்பட்டனர். ராகுல் சஹர் சிறப்பாகப் பந்து வீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இருபது ஓவர் முடிவில் 149 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ரன்னை உயர்த்தினர்.

மும்பை அணியின் விக்கெட் கீப்பரான குயின்டன்-தி-காக் (78) அதிரடியாக விளையாடி 44 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சர் விளாசி தனது அரைசதத்தைக் கடந்தார்.கொல்கத்தாவின் பந்து வீச்சு எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா 35 ரன்களிலும், சூர்ய குமார் யாதவ் 10 ரன்களிலும் வெளியேறினர்.

காக் மற்றும் ஹர்திக் பாண்டியா(21) இருவரும் இணைந்து அணிக்கு மற்றொரு வெற்றியை தேடித் தந்தனர்.அதிரடியாக ஆடி 78 ரன்களை குவித்த மும்பை அணியின் காக் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 8 போட்டியில், 6 வெற்றிகளைப் பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது மும்பை அணி.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Ipl league News

அதிகம் படித்தவை