சொல்றியா? செய்றியா? பிக்பாஸில் ஆட்டம் போடும் நடிகர்.. நீ கேள்வி கேட்காதே மோதும் பிரபலம்..

BigBoss 4: Actor Rio and Aari Clash

by Chandru, Oct 19, 2020, 12:52 PM IST

பிக்பாஸ் சீசன் 4 ஷோவின் 15வது நாளில் டெய்லி பாஸ் என்ற புது ஆட்டம் ஆரம்பமாகிறது. நேற்று நடந்த ஷோவில் கமல்ஹாசன் முன்னிலையில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட மாஸ்க் பற்றி ஆரி, ரியோராஜ், சனம், ரேகா உள்ளிட்டவர்கள் வாதம் செய்தனர். ஒருவழியாக தர்க்கம் முடிந்து கடைசியில் எவிக்‌ஷன் நடக்க, நடிகை ரேகா வீட்டிலிருந்து வெளியேறினார். அதற்காக வீடே அழுது புலம்பியது.

இன்று நடக்கும் 15வது நாள் ஷோவின் புரோமே வெளியிடப்பட்டது. அதில் ரியோவின் ஆட்டம் அதிகரிக்கிறது. போட்டியாளர்களின் படங்கள் ஒட்டிய அதிர்ஷ்ட சக்கர போர்டை சுழற்றிவிடும் ரியோ இது உங்க டெய்லி பாஸ். சொல்றியா இல்ல செய்யறியா எனச் சொல்ல நீங்க 3 பேரை தேர்வு செய்தால் யாரை செய்வீர்கள்? எப்படி செய்வீர்கள்? என அஜித் கேட்கிறார். அதற்கு மொட்டை சுரேஷ் குறுக்கிட உடனே ரியோ, கேள்வி கேட்கற வரையிலதான் நீங்க கேமில் இல்லை அதுக்கப்பறம் நீங்க இருப்பீங்க என்கிறார். நடிகர் ஆரி ரியோவிடம், நீங்க எங்கள கேள்வி கேட்கக் கூடாது நாங்கதான் கேக்கணும் என்று சொல்ல மீண்டும் சுரேஷ் மூக்கை நுழைக்க சபாஷ் கேப்டன் என்று ரியோ கைதட்டி பாராட்டுகிறார்.

பிறகு, மேலே இருக்கிறவர் சொல்லிடப்போறாரு என்று மீண்டும் சுரேஷ் சொல்ல. எங்க, மேலயா? வேலை இல்லையா? சார் நீங்க ஏதாவது சொல்லிட்டே இருப்பீங்க அவங்க ஏதாவது நோண்டிட்டே இருப்பாங்க என்று குழப்பமான உரையாடல்களுடன் புரோமோ முடிகிறது. இன்றைக்கு மோதல் எப்படி வெடிக்கும் என்பது இரவில்தான் தெரியவரும்

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை