மழை பெய்து கொண்டிருந்ததால கார்டனில் கொஞ்சப் பேரும், மழையில் நனையாமல் கொஞ்சப் பேரும் உல்லால்லா பாடலுக்கு ஆடினர்.
முதல் பஞ்சாயத்து
சனம் தான் வாஷ்ரூம் டீம் கேப்டன். சுரேஷ் தன்னோட துணியை குனிஞ்சு துவைக்க முடியாதுனு சொல்லி, வாஷ்பேசின்ல துவைச்சக்கட்டுமானு சனம் கிட்ட கேக்கறாரு. அங்க வேணாம், கொடுங்க நான் அலசித் தரேன்னு சொன்னதை விரும்பாம, வீட்டுக்குள்ள வந்துடறாரு. உள்ள வந்தவரு, சம்மு கிட்ட இதை சொல்றாரு. கேப்டன் கிட்ட பேசுங்கனு சொன்ன உடனே, அங்க வரவைக்கத் தானே இந்த ப்ளான் அப்படினு வார்த்தை விடறாரு. அங்கிருந்த ஆஜித், டக்குனு இப்படியெல்லாம் பேசாதீங்க, வெளிய கேட்டா தப்பா தோணும்னு, சுரேஷுக்கே அட்வைஸ் பண்றான்.
அடுத்து அங்க வர பாலா கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னதும், அவன் பெட்ரோல் மாதிரி பக்குனு பத்திக்கறான். ஏன்னா, சனம் பேர் இருக்கே. அதுவரைக்கும் பொதுவா 3 பேருக்கு மட்டுமே தெரிஞ்ச விஷயம், பாலாவுக்கு தெரிஞ்ச உடனே, அவன் வேணும்னே சத்தமா பேசறான். இருந்தும் ஆத்திரம் அடங்காம, கேப்டனை கூப்பிட்டு வாஷ்பேசின்ல துணி துவைக்கறதுல ஏதாவது பிரச்சனையா?னு கேக்க ரியோவும் யதார்த்தமா ஓக்கே சொல்லிடறாரு. சுரேஷ் கிட்டப் போய் கேப்டன் கிட்ட பர்மிஷன் வாங்கியாச்சு, நீங்க துவைங்கனு சத்தமா சொல்றாரு.
இதைக் கேட்ட சனம், உடனடியாக ரியோ கிட்ட வந்து கேக்கவும், ஆமா, நான்தான் பர்மிஷன் கொடுத்தேன்னு ரியோவும் சொல்றாரு. இதோட முடிஞ்சுருந்தா யாருக்கும் பிரச்சனையே இல்லை. அங்க தான் சனம்க்கு பல்ப் எரிஞ்சுது. "நான் அவருக்கு நல்லது தான் சொன்னேன்." "நேத்து பாத்ரூம் க்ளீனிங் டீம் வேணும்னு அவரே தான் கேட்டாரு, அது முடியும், இது முடியாதா? எங்கேயோ இடிக்குதேனு, ரியோ கிட்ட கொளுத்தி போடறாங்க. அதை பக்கத்துல உக்காந்து கேட்ட கேப்பி, அப்பவே அதை அப்ஜெக்ட் செய்யறாங்க. துணி துவைக்கறது அவரோட பர்சனல் விஷயம், அதைப் பத்தி ஏன் பேசனும்னு கேப்பி கேக்கவும், உனக்கு பாயிண்ட் புரியலனு சனம் கிளம்பிடறாங்க. ரியோவும் சனம் சொன்ன பாயிண்ட்டை அக்சப்ட் பண்றாரு.
யெஸ், நாம எதிர்பார்த்த மாதிரியே, அடுத்து இந்த மேட்டர் சுரேஷ் காதுக்கு போகுது. கேப்பி வைஸ் கேப்டன்ங்கற முறையில சனம் கிட்ட மீண்டும் விளக்கம் கேட்கறாங்க. அப்ப அங்க வர சுரேஷ், சனமை கடுமையா எச்சரிக்கறாரு. இந்த பஞ்சாயத்து கேப்டன் கிட்ட போகுது. அப்படி, இப்படிப் பேசி முடிக்கறாங்கனு வைங்க. சரி, இதெல்லாம் ஒரு பஞ்சாயத்னு இதை இவ்வளவு நேரம் காமிக்கனுமானு நேத்து எபிசோட் பார்த்த எல்லாருக்கும் தோணிருக்கும். இந்த பஞ்சாயத்துல நாம புரிஞ்சுக்க வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கு. அதுக்காக கொஞ்சம் அன்சீன்ஸ் எபிசோடும் பார்த்தேன்.
சுரேஷ் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததை கமல் சார் பாராட்டினது நமக்கு நினைவு இருக்கலாம். அதோட பிரதிபலன் என்னான்னா, பாலா, ஆஜித், கேப்பி, சம்யுக்தா நாலு பேரும் இப்ப சுரேஷ் பாக்கெட்ல இருக்காங்க. ஒரு குரூப்பா பார்ம் ஆகிருக்காங்க. முந்தின நாள் நைட், சுரேஷ், சம்மு, கேப்பி, பாலா நாலு பேரும் தனியா பேசறாங்க. ரியோ தன்னை தொடர்ந்து அவமானப்படுத்தறதை, நக்கல் செய்யறதை மத்தவங்க கிட்ட சொல்றாரு சுரேஷ். (நமக்குக் காண்பிக்கப்படலை.) கேப்பியை வைஸ் கேப்டனா போட்டதுல கூட உள்நோக்கம் இருக்குனு சந்தேகப்படறாரு சுரேஷ். அதுக்கப்புறம் பாலாவும், சுரேஷும் ஆரியை பத்தி பேசறாங்க. ஆரிக்கும், சுரேஷுக்குமே சின்னதா ஏதோ பஞ்சாயத்து ஓடுது போல. மிட்நைட்ல ஆரிகூடவும் முகமூடி கொடுத்த காரணத்தை பத்தி டிஸ்கஸ் பண்றாரு சுரேஷ்.
இந்த குரூப் பார்ம் ஆனதை உறுதிபடுத்தறா மாதிரி தான் நாமினேஷன் நடந்தது. சுரேஷ், கேப்பி, ஆஜித், பாலா, சம்யுக்தா இவங்க 5 பேரும் சேர்ந்து சொன்ன ஒரு பேர் ஆரி. அடுத்து சம்யுக்தா, ஆஜித், கேப்பி 3 பேரும் அனிதா பேரை சொல்றாங்க. அனிதாவுக்கும் இவங்க 3 பேருக்கும் நேரடியா எந்த பிரச்சனையும் இல்லை. ஆனாலும் அனிதா பேர் வருதுனா அதுல சுரேஷ் பங்கு இருக்காதுனு மொத்தமா ஒதுக்கிட முடியாது. இதுல ஷிவானி கூட இருக்காங்களானு கன்பார்ம் செய்ய முடியல. அவங்க நாமினேஷனும் அனிதாவும், ஆரியும் தான். கேப்பியும், ஆஜித்தும் ஷிவானிக்கு ஹார்ட் கொடுத்ததை இங்க கனெக்ட் செஞ்சா, ஷிவானி இந்த குரூப்ல தான் இருக்க முடியும்னு தெளிவா தெரியும். இருந்தாலும் நேரடியான ஆதாரம் இல்லைங்கறதால, கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்.
இந்த 6 பேர் இல்லாம அர்ச்சனா, சோம், ரம்யா 3 பேரும் ஆரி பேரை சொல்றாங்க.
அதே மாதிரி எதிரணில சுரேஷ் பேரை சொன்னவங்க யாருனு லிஸ்ட் எடுத்தோம்னா இன்னொரு குரூப்க்கான அவுட்லைன் தெரியும். ரம்யா, நிஷா, ஆரி, சோம், அனிதா, ரமேஷ், சனம், ரியோ, வேல்ஸ். 9 பேர் சொல்லிருக்காங்க. இதுல குரூப்பா இருக்கறவங்கனு பார்த்தா ரியோ, நிஷா, வேல்ஸ், ரம்யா மட்டும் சொல்லலாம். இதுவும் இன்னும் கன்பார்ம் பண்ணாத லிஸ்ட் தான். சுரேஷ் சொன்ன குரூப்ல யார் யார் இருக்காங்கனு இனிமே தான் கண்டுபிடிக்கனும்.
இறுதியா சுரேஷ், ஆரி, அனிதா, பாலா, ஆஜித் இந்த 5 பேரும் தான் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட். அதுவும் நாமினேஷன் போது சொல்லப்பட்ட வார்த்தைகளை வெளிய சொன்னது, பிக்பாஸே கொளுத்திப் போட்ட பட்டாசு.ரியோ, அர்ச்சனா, சனம், வேல்ஸ் 4 பேரும் நாமினேஷன்ல கிடையாது.
அனிதா + ஆரி, சுரேஷ் + பாலா எவிக்சன் பத்தி பேசிட்டு இருந்தாங்க. கணக்குப் போட்டு இந்த வாரம் நான் தான்னு அனிதாவும், சுரேஷ் ரெண்டு பேரும் புலம்பிட்டு இருந்தாங்க.ஒருவேளை சுரேஷ் வெளிய போகற நிலைமை வந்தா ஆஜித் வச்சுருக்கற எவிக்சன் ப்ரீ பாஸ்னால காப்பாற்றப்படுவார்னு பட்சி சொல்லுது. வெயிட் பண்ணி பார்ப்போம்.
அடுத்து செய்யறியா? சொல்றியா? கேம். ஹவுஸ்மேட்ஸ்ல இந்த வார நாமினேஷன் ஆனவங்க ஒரு டீமா இருந்து சொல்றதை மீதி இருக்கற 11 பேரும் செய்யனும்.முதல்ல வந்த வேல்ஸ் கிட்ட உங்களுக்கு பிடிக்காத 3 பேருக்கு மீசை வரைஞ்சு விடுங்கனு சொன்னதும் அவர் தேர்ந்தெடுத்தது ரம்யா, சனம், சோம்.
அடுத்து அர்ச்சனா வந்து வேல்ஸ், ஷிவானி, பேரை சொன்னாங்க. கூடவே ரியோவை பாராட்டிப் பேசி, அவரோட கோபத்தை கண்ட்ரோல் செய்யற குணத்தை மெயிண்டெயின் செய்ய சொன்னாங்க.
அடுத்து ரியோ வந்த போதே 11 பேருக்குள்ள தான் பதில் சொல்லனுமானு ஒரு கேள்வியை கேட்டுட்டு தான் ஆரம்பிச்சாரு. அவருக்கு 3 பேரை நாமினேட் செய்ய சொன்னாங்க. சனம், சாம், ஷிவானி 3 பேரை சொல்லிட்டு போனார்.
அடுத்து சம்யுக்தாவுக்கு 3 பேரை நாமினேட் செய்யனும். அப்படி செஞ்சா கிடைக்கற எவிக்சன் ப்ரீ பாஸ் வச்சு யாரை காப்பாத்துவீங்கனு கேள்வி. அவங்க நாமினேட் செஞ்சது சனம், அர்ச்சனா, ரியோ. அந்த ப்ரீ பாஸை வச்சு காப்பத்துவேன்னு சொன்னது சுரேஷ் அல்லது கேப்பியை. நோட் திஸ் பாயிண்ட்.
அடுத்து நிஷா வந்த போது அர்ச்சனா கொடுத்த அவார்டை மறுபடியும் கொடுக்க சொன்னாங்க. நிஷா டென்சன் ஆனது அப்பட்டமா தெரிஞ்சது. நோ கமெண்ட்ஸ் அவார்டை வேல்ஸ் மற்றும் ஷிவானிக்கு கொடுத்தாங்க. நமுத்து போன பட்டாசு அவார்டை சோம் & சனம்க்கு கொடுத்தாங்க. ரம்யாவை நாமினேட் செஞ்சுட்டு போனாங்க.இதுக்கப்புறம் தான் ரியோ எந்திரிச்சு மறுபடியும் ஒரு கேள்வி கேக்கறாரு. 5 பேர் கேள்வி கேட்டாலும், பதில் சொல்லும் போது 16 பேரையும் சேர்த்து பதில் சொல்லலாமே, ஏன் அதை செய்யலைனு கேட்ட உடனே, ஆரி ரூல்ஸை மறுபடியும் படிக்கறாரு.
நாமினேஷன் செய்யப்பட்ட 5 பேர் சொல்வதை மீதமுள்ள 11 பேர் செய்யனும், அப்படி படிச்சுட்டு இருக்கும் போது குறுக்க புகுந்த சுரேஷ், "அவ்வளவு தான் இது போதும், இதுக்கு மேல படிக்க வேண்டியதில்லை" நாங்க சொல்றதை செய்யனும்னு சொல்லவும், ரியோவுக்கு அதீத கோபம் வந்தது. உடனடியா அதை வெளிக்காட்டவும் செஞ்சாரு. அதுக்கு மேல படிக்கவும் விடலை. ரியோவும் விடாம பேசவும், ஏதாவது தப்பிருந்தா மேல இருந்து சொல்லிருப்பார்களே, ஒன்னுமே சொல்லலையேனு தன்னோட வாதத்தை நியாயப்படுத்தவும் செஞ்சாரு. இதை ரெண்டாவது முறையா சொல்றாரு சுரேஷ். இந்த மாதிரி விதிமீறல் நடக்கும் போது கூட விளையாடற ஹவுஸ் மேட்டை தான் கேக்கனும். அவங்க தான் விழிப்பா இருந்து கண்டு பிடிக்கனும். அதே சமயம், விதிமுறைகளை தவறா பயன்படுத்தின எல்லா இடத்திலும் பிக்பாஸும் தடுப்பதில்லை என்பதும் இங்க கவனிக்கனும்.
இந்த டாஸ்க் பத்தி ஆரம்பத்துல ரியோ படிக்கும் போது, "இந்த டாஸ்க்கை ஹவுஸ்மேட்ஸ் அனைவருமிணைந்து விளையாட வேண்டும்" என்பது தான் முதல் வரி. 11 பேருக்குள்ள தான் செலக்ட் செய்யனும்ங்கறது ரூல்ஸ்ல இல்லை.
சுரேஷ் மேல ரியோவுக்கு ஏன் இவ்வளவு காண்டுனு ஒரு கேள்வி வருது. சுரேஷ் சரியான இடத்துல, சரியான நேரத்துல புத்திசாலித்தனமா பேசி ஸ்கோர் பண்ணிடறார். அதுல மாற்றுக்கருத்தே இல்லை. அதே சமயம் அவர் தப்பு செஞ்சு மாட்டிக்கற டைம்ல, மத்தவங்களோட கேள்விக்கு நின்னு பதில் சொல்றதில்லை. எவிக்சன் ப்ரீ பாஸ்ல டிவில அம்பலபட்டு உள்ள வந்த போது, ரியோ பேசிட்டு இருக்கும் போதே பதிலே சொல்லாம விலகி போய்ட்டாரு. அந்த செயல் ரியோவோட கோபத்தை இன்னும் அதிகபடுத்துது. வேல்முருகன் கோபபட்டதுக்கும் இதே காரணத்தைச் சொன்னது உங்களுக்கு நினைவு இருக்கலாம். அதே மாதிரி தான் பேச வேண்டிய பாயிண்ட்ஸை பேசிட்டு, எதிராளிக்கு வாய்ப்பே கொடுக்காம அந்த இடத்துல இருந்து நகர்ந்து போனதையும் அவரோட வழக்கமா வச்சுருக்காரு. இன்னிக்கு சனம் கிட்ட பேசிட்டு போனதும் ஒரு உதாரணம்.
கூடவே எதிராளி கோபமா பேசிட்டு இருக்கும் போது நக்கலா சிரிக்கறது, வேணும்னே ஆமோதிக்கறது, போலியா பாரட்டறதுனு அவர் செய்யும் சில சேஷ்டைகள் எதிராளியை இன்னும் எரிச்சலாக்கக் கூடியது. சுரேஷை விட வயதும், அனுபவமும் குறைந்த ரியோ போன்றவர்கள் சுரேஷ் மாதிரியான நபர்களை தங்கள் வாழ்நாளில் சந்தித்து இருக்க வாய்ப்பு குறைவு.
எப்படியாவது அவரை ப்ளாக் பண்ணனும்னு இது வரைக்கும் ரியோ செஞ்ச முயற்சிகள் எல்லாமே தோல்வில தான் முடிஞ்சுருக்கு. அந்த கையாலாதனமும் சேர்ந்து ரியோவோட கோபத்தை இன்னும் அதிகபடுத்துது. சுரேஷை பல இடத்துல சீண்டிருக்காரு ரியோ. அன்சீன்ல சுரேஷ் சில சம்பவங்களை சொல்றாரு. இதெல்லாம் சேர்ந்து சுரேஷ் மேல தீராத கோபத்துல இருந்த டைம்ல, இந்த டாஸ்க் சம்பந்தமா கேள்வி கேட்ட போதும், சுரேஷ் நடுவுல புகுந்து அலட்டலா பதில் சொன்னது ரியோவை இன்னும் அதிகமா கோபப்பட வைக்குது. அப்பவும் எல்லாரும் பேசிட்டு இருக்க சுரேஷ் எழுந்து வெளிய போய் கேமராவை பார்த்து சிரிக்கறாரு.
இந்த பஞ்சாயத்து முடிஞ்ச அடுத்த நிமிஷம் வேல்முருகனும் வெடிச்சு கிளம்பறாரு. ஆரம்பத்துல இருந்தே வேல்ஸ் பேரை சும்மானாச்சுக்கும் சொல்றதை எல்லாரும் பழக்கமா வச்சுருந்தாங்க. நேத்து பாலா சொன்னா மாதிரி எல்லாரும் டிப்ளமேட்டிக்கா இருக்காங்க. கூடவே யாரால தொல்லை இல்லையோ அவங்க பேர் சொல்றதை வாடிக்கையா வச்சுருக்காங்க. வேல்ஸ், ஆஜித், ஷிவானி பேர் எல்லாம் அடிக்கடி சொல்லப்படற காரணமும் அதுதான். இதையும் பாலா மிகச்சரியா சுட்டி காட்டினது ஞாபகத்துல இருக்கலாம்.
ஆரம்பத்துல அதை சிரிச்சுகிட்டே கடந்துட்டாலும், ஒரு டைம்ல எல்லாரும் நம்மளை ஏமாத்தறாங்க, நாம கோமாளியா இருக்கோம்னு உண்மை உரைச்ச கணம் தான், நேத்து வேல்முருகன் வெடிச்ச தருண்ம். அவரை யாராலையும் சமாதானப்படுத்த முடியல. கடைசில அர்ச்சனா அதட்டி உக்கார வச்சாங்க.
இந்த பக்கம் நாமினேஷன் டீம்ல எல்லாருக்கும் ஐடியா மட்டும் கொடுத்துட்டு இருந்த சுரேஷை கையும் களவுமா பிடிச்சாரு ஆரி. ஏன் நீங்க ஒரு கேள்வி கூட கேக்கலங்கற கேள்விக்கும் வெறும் சிரிப்பையே பதிலா கொடுத்தாரு சுரேஷ்.
ஒரு வழியா சொல்றியா செய்யறியா டாஸ்க் முடிஞ்சுது. ஆரியும், ரியோவும் இந்த டாஸ்க் பத்தி பேசிட்டு இருக்க, தன்னோட கருத்தை சொல்ல ஒரு வாய்ப்பு கேட்டுட்டே இருந்தாங்க அனிதா... பல தடவை கேட்டும் ஆரியும், ரியோவும் கண்டுக்கவே இல்லை.
ஒரு கட்டத்துல அனிதாவும் வெடிச்சுட்டாங்க. வேல்முருகனை சமாதானப்படுத்தும் போதும் அனிதா பேசினதை யாருமே கேக்கலை. பேசவும் விடலை. அங்கேயும் ஆரியும், ரியோவும் தான் முன்னாடி இருந்தாங்க. இவ்வளவு பேர் இருக்கற சபைல அனிதாவை விட வயசுல சின்னவங்களான ரம்யா, பாலா, கேப்பி குரல்களுக்கு மதிப்பு கிடைக்கும் போது, தன் குரலுக்கு பேசவே வாய்ப்பு கிடைக்கலையேன்னு அவங்களுக்கு மிகப்பெரிய குறை. "என்னை விட சின்ன பையன் பாலாவை பேச விடறீங்க, அவன் பேசினா சரியா இருக்கும்னு சொல்றிங்க, ஆனா என்னை பேச விட மாட்டேங்கறீங்கனு" சொன்னதுல இருந்து, இது ரொம்ப நாளா அனிதா மனசுக்குள்ள உறுத்திட்டு இருந்திருக்குனு தெரியுது.
சின்ன வயசுல இருந்து தன் உருவம், உயரம் சார்ந்த தொடர் கேலி, கிண்டல்களால் தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் அனிதாவுக்கு, இந்த பிரச்சினைக்கு காரணமும் தன் உருவம் + உயரம் தான்னு முடிவுக்கு வந்துட்டாங்க.
கிட்டத்தட்ட பெரும்பாலான நபர்கள் கம்பர்ட் சோன்ல இருந்து வெளிய வந்துட்டாங்க. மீதி இருக்கறவங்க என்னாவாங்கனு வெயிட் பண்ணி பார்ப்போம்.