பிக்பாஸில் பாலாஜியை கதறவிட்ட அர்ச்சனா.. கைகளை கட்டி கிண்டல் செய்ததால் பரபரப்பு..

by Chandru, Oct 28, 2020, 12:29 PM IST

பிக்பாஸ் 4 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் கடந்த இரண்டு வாரமாகப் போட்டியாளர்களின் மோதலுடன் ஷோ களைகட்டி போய்க்கொண்டிருக்கிறது. நாடா காடா, ராஜவம்சம், அரக்க வம்சம், போட்டோ எரிக்கும் படலம் வரை பல திருப்பங்கள் பிக்பாஸில் நடந்துக் கொண்டிருக்கிறது.

ரியோ ராஜ், மொட்டை சுரேஷ் சத்தம் அதிகமாகக் கேட்ட நிலையில் அனிதாவின் கதறலும், அழுகையும் சென்ட்டிமென்ட்டை சீண்டிப் பார்த்தது. மொட்டை சுரேஷ் சப்த நாடியும் அடங்கி பம்மிக்கொண்டிருக்கிறார் அதே சமயம் அர்ச்சனாவின் ஆட்டம் ஆரம்பித்திருக்கிறது. தன்னை எவிக்‌ஷன் வரிசையில் நிற்க வைத்தபோது அடாவடி காட்டியவர் இன்றைய புரோமோவில் பாலாஜியை நக்கல் நய்யாண்டி, கிண்டல் கேலி செய்து தெறிக்கவிட்டதுடன் அவரை கதறி கண்ணீர் விட வைத்திருக்கிறார்.

நாங்க இப்படி பண்ணக்கூடாது அப்படி பண்ணக்கூடாதென்று பாலாஜி சொல்லக்கூடாது, பாலாஜி சார் எப்ப வருவார் என்ன சொல்லுவார் என்று கைகட்டி காத்துகிட்டிருக்க முடியாது என்று ஆக்‌ஷன்கள் காட்டி அர்ச்சனா செய்த சேட்டை தாங்க முடியாமல் பாலாஜி கண்ணைக் கசக்கிக் கொண்டு ஓட்டம்பிடித்தார். இடையிடையே ரியோ ராஜ் குறுக்கிட்டு ஏதோ சொல்கிறார். இந்த அளவில் இன்றைய புரோமோ முடிந்தது. எதற்காக பாலாஜியுடன் அர்ச்சனா மோதினார் என்ற பரபரப்பு இன்று இரவில் தெரியும்.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை